எனக்கு கிடைத்த 10 லட்ச ரூபாயை வைத்து இது தான் பண்ணுவேன் - சரிகமப திவினேஷ் எஸ்குளூசிவ்

By subhashini · 31/5/2025

சரிகமப நிகழ்ச்சியின் டைட்டில் வென்றதற்கு பிறகு திவினேஷ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. வழக்கம்போல் அர்ச்சனா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த வாரம் தான் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இதில் திவினேஷ் தான் டைட்டில் பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு மெல்லிசை இளவரசன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தான் திவினேஷிக்கு டைட்டில் பட்டதை வழங்கியிருந்தார்.

சரிகமப நிகழ்ச்சி:

இவரை அடுத்து இரண்டாவது இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாவது இடத்தை ஹேமித்ரா பிடித்திருந்தார்கள்.
இந்நிலையில் டைட்டில் வென்றதற்கு பிறகு அளித்த பேட்டியில் திவினேஷ், எனக்கு முதன் முதலில் பாட கற்றுக் கொடுத்ததே என்னுடைய தாத்தா தான். என்னுடைய தாத்தாவை ரொம்ப பிடிக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல பாடல்களை பாடி மேலும் மேலும் வரணும் என்று தாத்தா சொல்லிக் கொண்டே இருப்பார். அதே மாதிரி அவர் எனக்கு நிறைய பாடல்களையும் கற்றுத் தந்தார். தாத்தா, வீட்டில் பாடுற பாடல்களை கேட்டு தான் நான் பழகினேன். அந்த பாடல்களை தான் என்னுடைய அப்பா, அம்மாவிடம் பாடி காமிப்பேன். அப்போ நான் பாடுவதை பார்த்து அம்மா தான் சரிகம நிகழ்ச்சிக்கு அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார்.

டைட்டில் வின்னர் திவினேஷ் பேட்டி:

அப்படியே அம்மாதான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். சரிகமப நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் என்னுடைய பள்ளி நண்பர்களும் என்னை பாராட்டினார்கள். நிகழ்ச்சியுடைய பைனலில் நான்தான் வெற்றியாளர் என்று சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. முதலில் நானும் ஹேமமித்ரா அக்கா தான் வின்னர் என்று நினைத்தேன். அதற்கு பிறகு தான் நான் வின்னர் என்று தெரிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வெற்றி பெற்றதன் மூலமாக எனக்கு 10 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது. அதை வைத்து என்னுடைய குடும்ப கடன்களை எல்லாம் நான் அடைக்க போகிறேன்.
ஆனால், இந்த பணத்தை வைத்து கடன் அடைக்கனும் என்று என் அம்மா சொன்னது கிடையாது. தினமும் கடனை நினைத்து என்னுடைய அம்மா அழுவார்கள்.

https://www.youtube.com/watch?v=kP5GMKrxllk

குடும்பம் பற்றி சொன்னது:

அதை பார்த்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதனால் தான் அந்த பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் என்று தோன்றியது. சரிகமப நிகழ்ச்சியில் மூலம் என்னுடைய தந்தைக்கு சொந்தமாக ஒரு பால் வேன் வாங்கி தந்தார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பைனலில் சிவகார்த்திகேயன் சார் கூட போட்டோ எடுத்துக் கொண்டேன். முக்கியமாக நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக மேடையில் பாடினோம். இந்த மாதிரியான பாடல்களை தொடர்ந்து பாடி வருங்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவாய் என்று சிவகார்த்திகேயன் சார் சொன்னார். எனக்கு இளையராஜா சாரை ரொம்ப பிடிக்கும்.

திவினேஷ் ஆசை:

அவருடைய போட்டு வைத்த காதல் திட்டம், மலையோரம் வீசும் காற்று, எங்கே செல்லும் இந்த பாதை போன்ற பாடல்களை எல்லாம் தாத்தாவும் நானும் தொடர்ந்து கேட்போம். நான் இப்போ வருகிற பாடல்களை பெரிதாக கேட்பது கிடையாது. எனக்கு பழைய பாடல்களை தான் ரொம்ப பிடிக்கும். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.வி சாரோட குடும்பத்தினர் வந்திருந்தார்கள். அவர்கள் சாரோட ஒரு பதக்கமாலையை எனக்கு கொடுத்தார்கள். அந்த மாலையை நான் பத்திரமாக பீரோவில் வைத்திருக்கிறேன். எனக்கு பெரியவன் ஆகி நடிக்கணும் என்பது ரொம்ப ஆசையாக இருக்கு. நிகழ்ச்சியில் எனக்கு ஜட்ஜஸ் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு கிப்ட் கொடுத்தார்கள். அவங்க தான் எனக்கு போன் வாங்கி கொடுத்தார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

behindtalkies AMP · Quick view
View full