ஸ்ருதி எப்போ வரும்ன்னு கேட்டான், அந்த அளவுக்கு தான் அவன் அறிவு - நெகிழ்ச்சியில் திவினேஷின் பெற்றோர்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இதில் திவினேஷ் தான் டைட்டில் பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு மெல்லிசை இளவரசன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தான் திவினேஷிக்கு டைட்டில் பட்டதை வழங்கியிருந்தார். இவரை அடுத்து இரண்டாவது இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாவது இடத்தை ஹேமித்ரா பிடித்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் திவினேஷின் பெற்றோர்கள் அளித்த பேட்டியில்,
எங்களுக்கு முதலில் கஷ்டங்கள் மட்டும் தான் இருந்தது. இப்போ அந்த கஷ்டங்களை கடந்து நாங்கள் எல்லோருமே எங்களுடைய பையனால் சந்தோஷமாக இருக்கோம். எங்க லைஃப் மொத்தமாக மாறிவிட்டது.
திவினேஷ் பெற்றோர்கள் பேட்டி:
இப்போ சமுதாயத்தில் நல்ல மரியாதை கிடைக்கிறது. அதுதான் ரொம்ப முக்கியம். அவனுக்கு பாட்டு உடைய அர்த்தங்கள் எதுவுமே தெரியாது. தாத்தா பாடுவதை கேட்டு அவனாக பாடுவான். நல்ல கருத்துள்ள பாடல்கள் தானே பாடுறான்னு நாங்களும் அவன் பாடுவதை கேட்போம். பாடும்போது அவன் குரலும் ரொம்ப நன்றாக இருக்கும். இவனை எங்கேயும் கூட்டிட்டு போற ஐடியா எல்லாம் எங்களுக்கு இல்லை. நாங்கள் ரெண்டு பேருமே வேலைக்கு போவோம். பிள்ளைகளை அம்மா, அப்பா தான் பார்த்துக் கொள்வார்கள். ஒரு முறை ஸ்கூலில் இவனை விடும்போது அவர் டீச்சரிடம், திவினேஷ் நல்லா பாடுவான். நீங்க கேட்டு பாருங்க என்று சொன்னேன்.
திவினேஷ் திறமை:
அவர்கள் கேட்டுவிட்டு, திவினேஷ் இவ்ளோ நல்லா பாடுறான். நீங்கள் ஏன் இவனை எந்த போட்டிக்கும் கூட்டிட்டு போகவில்லை என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். எதார்த்தமாக சென்னையில் சரிகமப ஆடிஷன் நடக்கிறது என்று போனில் பார்த்தேன். அது உண்மையா? பொய்யா? என்று கூட தெரியவில்லை. சரி நாம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னேன். இவன் ஆடிஷனில் செலக்ட் ஆகிவிட்டு கடைசியாக மெகா ஆடிசனுக்கு கூப்பிட்டார்கள். இவனுக்கு ரெண்டே பாட்டு தான் தெரியும். பழைய பாட்டுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுப்பாங்களா? என்றெல்லாம் எங்களுக்கு சந்தேகமாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=AFCSM086Ij0
வாய்ப்பு பற்றி சொன்னது:
அங்கு எல்லோரும் நல்லா பாடினார்கள். மெகா ஆடிசனுக்கு போக வேண்டாம் என்று முடிவெடுத்து நாங்கள் லேட்டா தான் ஆடிசனுக்கு போனோம். எங்களுக்கு இவன் செலக்ட் ஆகுவான் என்று நம்பிக்கை இல்லை. அங்கு ட்ரைனிங் போனப்ப கூட அவங்க, ஸ்ருதியோடு பாடுவியான்னு கேட்டார்கள். இவனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. ட்ரைனிங் முடித்துவிட்டு கிளம்பும்போது அவரிடம் ஸ்ருதி என்று சொன்னிங்களே, அது எப்ப சொல்லி கூப்பிடுவீங்கன்னு கேட்டான். அந்த அளவுக்கு தான் அவனுக்கு அறிவு இருந்தது. இப்ப ஸ்ருதி, டெம்போ எல்லாம் தெரிகிறது. நாம் ஏதாவது தப்பா பாடினாலும் இப்படி பாடக்கூடாதுமா, இந்த ஸ்கேலில் பாடணும் என்று சொல்கிறான்.
பெருமிதம் கொள்ளும் பெற்றோர்கள்:
கடன் வாங்கி தான் இவனை கூட்டிட்டு போனோம். கடன் கொடுத்தவர்கள் எல்லோருமே அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டார்கள். சொந்தம் கூட உதவி செய்தார்களா தெரியவில்லை. அக்கம பக்கத்தினர், கடன் கொடுத்தவர்கள் எல்லோருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கடன் கொடுத்தவர்களும் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். இப்ப இந்த பெரிய வீட்டில் தான் வாடகைக்கு இருக்கிறோம். இதற்கு காரணமும் திவினேஷ் தான். நாங்கள் கஷ்டப்பட்டு இப்ப சந்தோஷமாக இருக்கிறோம். பால்வண்டி வாங்கினது என்னோட 15 வருட கனவு. அது இன்னைக்கு என் பையன் மூலமாக நிறைவேறி இருக்கிறது. வாய்ப்பு ஒரு தடவை தான் கிடைக்கும் முயற்சி பண்ணு, முயற்சியை மட்டும் விட்டுவிடாதே என்று எப்பவும் சொல்லிக் கொண்டே இருப்போம். திவினேஷையும் எங்க மூத்த பையன் சந்தோஷையும் கஷ்டம் சொல்லி தான் வளர்த்து இருக்கிறோம் என்று பெருமையாக பல விஷயங்களை மனம் திறந்து கூறியிருக்கிறார்கள்.