எதிர்த்தால் அதில் தான் என்னோட வளர்ச்சி..!சர்க்காரின் அடுத்த சாதனை..!

By Rajkumar · 10/11/2018
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து இன்று மதியத்திற்குள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கப்படும் என்று படகுழு சம்மதம் தெரிவித்தது.இதையடுத்து சர்க்கார் படத்தில் இடம்பெற்ற மூன்று காட்சிகள் நீக்கபட்டது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் சர்கார் படம் மூன்றாம் நாளான நேற்று (நவம்பர் 9) தமிழகத்தில் புதிய சாதனையை செய்துள்ளது.அதாவது உலகளவில் இந்த திரைப்படம் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 4 நாளில் 6.9 கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை எந்த ஒரு படமும் செய்திராத சாதனையை செய்துள்ளது.ஏற்கனவே, வெளியான முதல் நாளில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை ஞாயிற்று கிழமை என்பதால் இன்றை விட படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full