வெளியானது சர்கார் படத்தின் புக்கிங் தேதி பற்றிய அதிகாரபபூர்வ அறிவிப்பு...!

By Rajkumar · 31/10/2018
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு திட்டமிட்டபடி வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. சர்கார் படத்தின் கதை திருட்டு விவாகரத்தில் துணை இயக்குனர் வருண் என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்கார் படகுழுவினரிடம் சமரசம் ஏற்பட்டு வழக்கு இன்று தள்ளுபடி செய்யட்டப்பட்டது.இதை தொடர்ந்து சர்கார் படம் சிக்கல் இல்லாமல் வெளியாகும் என்று அனைவரும் நம்பிக்கை கொண்டனர். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் சர்கார் படத்திற்காக திரையரங்குகளையும், புக்கிங் வேலைகளையும் மும்மரபடுத்தியுள்ளனர். இந்த நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சர்கார் படத்தின் புக்கிங் தேதியை அறிவித்துள்ளது . வரும் நவம்பர் 2 அதாவது வரும் வள்ளிக்கிழமை முதல் சர்கார் படத்தின் முன்பதிவுகள் இணையத்தில் துவங்கி விடும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
behindtalkies AMP · Quick view
View full