சர்கார் கொண்டாட்டம்..! முக்கிய தகவலை வெளியிட்ட "Sun Pictures"..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'சர்கார்' படத்தின் அப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) 'சர்கார்' படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், தற்போது விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பான அப்டேட்டை அளித்திக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதாவது அடுத்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 'சர்கார்' படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதற்கு முன்பாக வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி "சர்கார்" படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக சன் பிசர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி "சர்கார்" படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் ஒரு வேலை படத்தின் சிங்கள் டிராக் பாடல் எதாவது வரும் செப்டம்பர் 19 தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.#SarkarKondattam starts! First announcement on 19th at 11am! pic.twitter.com/YprYM5wjIc
— Sun Pictures (@sunpictures) September 17, 2018