விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் – இயக்குனர் அட்லி.

Advertisement

இந்த படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் யார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இதுவரை மூன்று விஜய் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். விஜய் நடித்த ‘உதயா, அழகிய தமிழ் மகன்’ போன்ற படங்களில் ரகுமானின் இசை அந்த அளவிற்கு எடுபடவில்லை. அதே போல அந்த இரு படங்களும் தோல்வி அடைந்தது.

Advertisement

Advertisement

ஆனால், ஏ ஆர் கடைசியாக இசையமைத்த ‘மெர்சல்’ படத்தில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. அதே போல படமும் ஒரு வெற்றி படமாகவே அமைத்து. இந்நிலையில் விஜய் – ரகுமான் கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் புதிய படமும் ‘மெர்சல் ‘ படம் அடைந்த வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது

Advertisement