சம்பாதிச்சதா எல்லாம் தானம் பண்ணிட்டாரு, நாங்க இன்னும் வாடக வீட்ல - மாறனின் மனைவி கண்ணீர் பேட்டி.

By Rajkumar · 26/7/2021

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதே போல இந்த படத்தில் மாஞ்சா கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாறன்.

இதையும் பாருங்க : இது பொறுக்கித்தனம், இப்படி ஒரு கெளவமான சீரியலை ஒளிபரப்ப கூடாது - சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் புதிய சீரியல்.

இவருக்கு இது தான் கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கில்லி படத்தின் மூலம் அறிமுகமான மாறன் அதன் பின்னர் டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன் என்று பல்வேரு படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.

https://www.youtube.com/watch?v=baG5K12rDzY

சார்பட்டா படத்தில் இவரது காட்சியை பார்க்கும் போது பலரும் இவருக்காக இறக்கப்பட்டு இருப்பார்கள். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறனின் மனைவி, அவர் தனக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லை. எல்லாம் தானாம் பண்ணிட்டார். இப்பவும் வாடகை வீட்டில் தான் இருக்கோம். இந்த படத்திற்காக ரொம்ப ஆசைப்பட்டார். ஆனால், பலன் கையில் கிடைக்கும் போது அதை பார்க்க அவர் இல்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full