சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் குறித்து ரஞ்சித் சொன்ன செம தகவல் - இதான் கதையாம்.

By Rajkumar · 8/8/2021

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இந்த திரைப்படத்தில் 70 காலகட்ட பாக்சிங் பரம்பரைகளை பற்றி காண்பித்து இருந்தாலும் படம் முழக்க தி மு கவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல தான் பல காட்சிகளும், வசனங்களும் இருந்தது.

இதையும் பாருங்க : மினி ஷகிலா ரேஞ்சுக்கு மாறியுள்ள SMS பட நடிகை - வெப் சீரிஸில் உச்சகட்ட கிளாமர். வைரலாகும் வீடியோ.

அதே போல ரஞ்சித் எம் ஜி ஆரை தவறாக சித்தரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் இருக்கிறது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை தான் பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் விளக்கமளித்துள்ளார் ரஞ்சித். இதுகுறித்து பேசிய அவர்,

சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன்கதையாக (Prequel)வைத்து படம் எடுக்கயோசித்து வைத்து இருக்கிறேன். 1925-ல் ஆரம்பிப்பதுபோல் கதை இருக்கும். இதை வெப் தொடராகவோ அல்லது திரைப்படமாகவோ எடுக்கும் எண்ணம் உள்ளது என்று கூறியுள்ளார். ரஞ்சித்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full