வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம் - தங்கள் வாத்தியாரை சைக்கிளில் அமர வைத்து ரவுண்ட் அடித்த வேம்புலி, டான்சிங் ரோஸ்.

By Rajkumar · 10/8/2021

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

https://twitter.com/johnkokken1/status/1424967269742833665

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதில் பசுபதி ஒரு தீவிர தி மு க தொண்டராக நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : 9 ஆண்டுகளில் 9 அறுவை சிகிச்சை, கொரோனா தொற்று, வறுமை - இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் பட நடிகை.

இந்த திரைப்படத்தில் 70 காலகட்ட பாக்சிங் பரம்பரைகளை பற்றி காண்பித்து இருந்தாலும் படம் முழக்க தி மு கவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல தான் பல காட்சிகளும், வசனங்களும் இருந்தது. இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை தைரியமாக தேர்வு செய்துள்ள பசுபதிக்கு பல பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களாக இவரது டெம்ப்லேட் தான் மீம் கிரியேட்டர்கள் வச்சி செய்து வருகின்றனர்.

https://twitter.com/ShivaaSRT/status/1424978271909806084

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இடம்பெறும் பசுபதி தொடர்பான காட்சியின் டெம்ப்லேட் இணையத்தில் படாத பாடு படுகின்றது. வாத்தியாரே ஏன் நடந்து போரிங்க வாங்க சைக்கிள்ல போலாம்... எனும் வரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் பல விதமான மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் துரைக்கண்ணு வாத்தியாரின் மாணவராக வரும் டான்ஸிங் ரோஸ் மற்றும் வேம்புலி இருவரும் தங்கள் வாத்தியாரை சைக்கிளில் வைத்து ரவுண்டு அடித்து உள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full