திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நடிகர் மீது சசிகுமார் பட நடிகை புகார்.

By Rajkumar · 11/6/2020

சமீப காலமாகவே பெண்களை திருமண ஆசைக் காட்டி ஏமாற்றுவது அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இது சாதாரண பெண்கள் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் வாழ்க்கையிலும் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகையிடம் திருமண ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்து ஏமாற்றியதற்காக நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் தெலுங்கு நடிகை ஒருவர் தன்னைத் திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றியதாக ஒளிப்பதிவாளர் மீது போலீசில் புகார் கூறியிருந்தார். அந்த நடிகை தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது அவருக்கு 32 வயது ஆகிறது. அந்த நடிகை சசிகுமார் நடித்த படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அந்த நடிகை தற்போது மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறி இருப்பது, நான் சினிமாவில் நடித்து வருகிறேன். தரிசு நிலம் என்ற படத்தில் நடித்த போது எனக்கு தியாகராஜன் (32) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர். முதலில் நாங்கள் நட்பாக பழகினோம். பின்னர் நாங்கள் இருவரும் 2011 ஆம் ஆண்டிலிருந்தே காதலித்து வருகிறோம்.

அவர் சென்னை மாநகராட்சியில் வேலை செய்கிறார். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். இதனால் நான் அவருடன் நெருங்கி பழகி வந்தேன். இதையடுத்து நாங்கள் பல முறை உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில் தியாகராஜன் சில காலமாகவே என்னை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் வந்தது. செல்போனில் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருந்தவர் என்னிடம் பேசுவதையே நிறுத்தினார். ஒரு நாள் திடீரென்று அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். திருமணம் பற்றி பேசினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

திருமணம் செய்வதாக சொல்லி என்னை ஏமாற்றி மோசம் செய்த தியாகராஜன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தான் தியாகராஜனை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தியாகராஜன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full