படமாகிறது சசிகலாவின் வாழ்கை வரலாறு.! அதுவும் இந்த சர்ச்சை இயக்குனர் இயக்கத்தில்.!

By Rajkumar · 1/4/2019

கடந்த சில காலமாக தலைவர்களின் வாழக்கை வரலாறு கதைகள் படமாக்கபட்டு வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் என் டி ஆர்ரின் வாழ்க்கை வரலாறு படமாக்கபட்டது. தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்ரை 'தலைவி' என்ற பெயரில் ஏ எல் விஜய் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் சர்ச்சைக்குரிய இயக்குனராக விளங்கி வரும் ராம் கோபால் வர்மா சசிகலா வாழ்க்கை வரலாற்றையும் கையில் எடுத்துள்ளார். ‘அறிவிப்பதில் சந்தோ‌ஷப்படுகிறேன். விரைவில்’ என்று ட்வீட் செய்து அதனுடன் சசிகலா பயோபிக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

ராம்கோபால் வர்மா 2017-ம் ஆண்டு ‘சசிகலா’ பயோபிக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு படங்களை இயக்கி வந்ததால், ‘சசிகலா’ பயோபிக் குறித்து எந்த வொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

https://twitter.com/RGVzoomin/status/1112338640460492806

ராம்கோபால் வர்மா சசிகலா பற்றி கூறும்போது ‘சசிகலா படம், சசிகலாவின் பின்புலம் பற்றிய கதையின் கதையாக இருக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என நான் நிச்சயமாக நினைக்கிறேன். போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னதின் படி, ஜெயலலிதா, சசிகலாவுக்கு இடையே இருந்த உறவுக்குப் பின் இருக்கும் உண்மை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கிறது. அதை என் படத்தில் காட்டுவேன்’ என்று கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=QwSrVc0V3aA

Tamil Behind Talkies AMP · Quick view
View full