தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராகவும், பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு வலம் வருபவர் கங்கை அமரன். இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கங்கை அமரனுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை சசிகலா மிரட்டி வாங்கியதாகவும் அதை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் கங்கை அமரன். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

செங்கல் மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவிற்கு தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை பினாமி தடுப்பு சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை நேற்று சீல் வைத்துள்ளது. இந்நிலையில் கங்கை அமரன் அவர்கள் தன்னிடமிருந்து சசிகலா மிரட்டி வாங்கப்பட்ட அந்த பையனூர் பங்களாவை தனக்கே மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக கங்கை அமரன் அவர்கள் ஏற்கனவே அவர் எழுதிய பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் நூலில் விரிவாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் கூறியிருப்பது, என்னோட பையனூர் பங்களாவை வாங்குவதற்காக சசிகலா அவர்கள் எனக்கு பல நெருக்கடி கொடுத்தார்கள். அது நான் என் மனைவிக்காக ஆசை ஆசையாக வாங்கினேன். நான் கொஞ்சம் சென்டிமென்ட் என்பதால் நான் விற்க முடியாது என்றாலும் சசிகலா விற்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

இடம் குறித்த டாக்குமெண்ட், அதிகாரிகள் என எல்லா வகை ஏற்பாடுகளையும் சசிகலாவே செய்தார்கள். அவர்கள் கொண்டுவந்த டாகுமெண்ட்டில் இங்கிலீஷ்சில் எழுதி இருந்தாங்க. அந்த அளவுக்கு எனக்கு இங்கிலீஷ் நாலேஜ் இல்லை. வேற யாராவது கிட்ட கொடுத்து படிக்கலாம் என்றாலும் அதற்கான அவகாசமும் அவர்கள் எனக்கு தரவில்லை.

Advertisement

எங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரையும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. அந்த அளவிற்கு எங்களை மிரட்டி வைத்திருந்தார்கள். பிறகு எல்லாம் சரியாக தான் எழுதி இருக்கு கையெழுத்து போடுங்கள் என்று கட்டாயப் படுத்தினார்கள். நான் தயங்கியபடியே யோசித்துக்கொண்டே இருந்தேன். ஆனால், கையெழுத்து போடுங்கள் என்று எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். வேற வழி இல்லாமல் நானும், என் மனைவி கலாவும் கையெழுத்து போட்டோம். விருப்பமில்லாமல் என் இடத்தை என்னை வற்புறுத்தி வாங்கினார்கள். அந்த இடத்திற்கான விலையைக் கூட எங்களிடம் பேச வில்லை .

Advertisement

அவர்களே அதற்கான விலையையும் போட்டார்களே. கிட்டத்தட்ட 30 ஏக்கருக்கு மேல் உள்ள இடத்தை வெறும் 17 இலட்சத்துக்கு பேசினார்கள். ஏன் இவ்வளவு கம்மியா தருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிறகு தருவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், அதன்பிறகு எந்த ஒரு பணத்தையும் என்னிடம் தரவில்லை. மேலும், நாங்கள் பையனூர் பங்களா எழுதிக் கொடுத்தால் அடையாறு பிலிம்சிட்டி பக்கத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை சசிகலா தரோம் என்று சொல்லியிருந்தார்கள். அது சம்பந்தமாக அவரிடம் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்தேன்.

ஆனால், சசிகலா எங்களிடம் பேச வில்லை. போன் மூலம் முயற்சி செய்தாலும் போனை கட் பண்ணி விடுவார்கள். நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் அவர்களை சந்திப்பதற்கு ஆனால், அவர்கள் என்னை சந்திக்க வாய்ப்பே தரவில்லை. பிறகு ஜெயலலிதா அம்மா சொல்லித்தான் இதெல்லாம் செய்தோம் என்றும் அவங்க தான் இந்த விலை சொன்னார்கள் என்று ஒரு சூழலை உருவாக்கி என்னை பேசவிடாமல் செய்தார்கள். இதுதான் உண்மையாக நடந்த விஷயம் என்று கூறியுள்ளார்.

Advertisement