கடன் பிரச்சனையால் பாதை மாறிய சசிகுமார் வாழ்க்கை- அவரே சொன்ன விஷயம்

By Rajkumar · 19/9/2024

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார், தான் படங்களை இயக்காமல் நிறைய படங்களில் நடித்தது குறித்து சமீபத்தில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'சுப்பிரமணியபுரம்'. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனையின் நடிப்பில் வெளிவந்த 'ஈசன்' என்ற படத்தை எடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

நந்தன் படம்:

அந்த வகையில் தற்போது சசி குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நந்தன்'. இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்பு 'உடன்பிறப்பு' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 20 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

நந்தன் பிரமோஷன்:

இந்நிலையில் படக் குழுவினர் இப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரமோஷனின் போது, நடிகர் சசிகுமார் ஏன் அடுத்தடுத்து படங்களை இயக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் ஈசன் படத்திற்கு பிறகு ஒரு நல்ல வரலாற்றுப் படத்தை இயக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த கடன் பிரச்சனைகளால் என்னால் படங்களை இயக்க முடியவில்லை.

கடன் பிரச்சனையில் சசிகுமார்:

மேலும், ஒரு படம் எடுக்க எனக்கு ஒரு ஆண்டு தேவைப்படும். அதனால் தான் நான் நடிக்க தொடங்கினேன். இப்போது என்னுடைய கடனை எல்லாம் நான் சமாளித்து விட்டேன். அதனால் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இதுவரை நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கையில் இல்லை. அது இன்னொருவர் கையில் இருந்தது. கடன் பிரச்சனையால் நான் தொடர்ந்து நடித்து வந்தேன். இப்போதுதான் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்த தொடங்கி இருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=IQiXdGPn7Ro

சசிகுமார் சொன்னது:

இந்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, பிறகு நான் எழுதி வைத்திருக்கும் கதைகளை இயக்கப் போகிறேன். அதேபோல் நான் இயக்கும் படங்களில் நான் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று சசிகுமார் கூறியுள்ளார். கடைசியாக சசிகுமார் நடித்த அயோத்தி, கருடன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், தற்போது சசி குமாரின் நடிப்பில் வெளியாக இருக்கும் 'நந்தன்' படமும் மக்களுக்கு பிடித்தவாறு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full