சசிகுமாரின் மனிதநேயமான 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஜெயித்ததா? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் சசிகுமார் தன்னுடைய மனைவி சிம்ரன் மற்றும் இரண்டுமகன்களுடன் இலங்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். இதனால் இவர் இலங்கையில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக இந்தியா வருகிறார். ராமேஸ்வரம் வந்த இவரை சிம்ரன் அண்ணன் யோகி பாபு தான் சென்னைக்கு அழைத்து வந்து கேசவ நகரில் குடி வைக்கிறார். இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளத்தையே மறைத்து சசிகுமார் குடும்பம் வாழ்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸ் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் சசிகுமார் குடும்பம் சிக்குகிறது. இந்த சவால்களில் இருந்து சசிகுமார் தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? அதனால் என்னென்ன பிரச்சனை வருகிறது? இதையெல்லாம் அந்த குடும்பம் சமாளித்து வந்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
இந்த படத்திற்கு பெரிய பலமே எமோஷனல், ஹியூமரும் தான். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கதைக்களமும் அதை கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் சிறப்பாக செய்திருக்கிறார். பொதுவாக இலங்கை தமிழர்களை வைத்து எடுக்கும் படம் எல்லாம் சோகமாக தான் இருக்கும். ஆனால், இந்த படத்தை இயக்குனர் கொஞ்சம் காமெடி பாணியில் எடுத்து சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அயோதி படத்துக்குப் பிறகு மீண்டும் மனிதத் தன்மை நிலைநாட்டும் ஒரு கதையை சசிகுமார் எடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
https://youtu.be/8VQA7jlMdKI?si=fJMm0B4-oh2NRGdI
இவரை அடுத்து நடிகை சிம்ரனின் நடிப்பும் பிரமாதமாக இருக்கிறது. இவரை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கச்சிதமாக இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை போரடிக்காமல் என்டர்டைன்மென்ட் ஆக இயக்குனர் சென்றிருப்பது பெரிய பிளஸ்.
அதோட படத்தின் உடைய மனித தன்மை, வசனங்கள், எமோஷனல், அழுகை என அனைத்தையுமே இயக்குனர் சரியாக கையாண்டு இருக்கிறார்.
மேலும், பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டீங் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் பன்னாக கொண்டு கொண்டு சென்று இருப்பதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை. ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கிறது.
நிறை:
கதைகளம் அருமை
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
இலங்கை தமிழர்கள் நிலை
நகைச்சுவை
https://youtu.be/rvD3eHJCtQs?si=AepRkvRpzWJggZfT
குறை:
சில லாஜிக் குறைபாடுகள்
சில சீரியசான காட்சிகளை காமெடியாக கொடுக்கப்பட்டிருக்கிறது
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி - பீல் குட் படம்