அவருக்காக நான் எதையும் செய்வேன், படம் கொடுக்கிறதுல என்ன தப்பு? இயக்குனர் சசிகுமார் ஓபன் டாக்

By ·

இயக்குனர் ரா.சரவணன் எழுதிய சங்காரம் தொடரை இப்போது முழு நாவலாக எழுதி வெளியே விட்டிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் சூரி, சசிகுமார், நக்கீரன் கோபால், ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் டி.கலைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசி இருந்தார்கள்.பின் இந்த விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், இயக்குனர் சரவணனை நான் முதன் முதலில் பிரபல பத்திரிகை அலுவலகத்தின் வாசலில் தான் பார்த்தேன்.

https://www.youtube.com/watch?v=0CiH4EtfWJ8

சுப்ரமணியபுரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நான் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்துக்கொண்டு வந்தேன். அப்போ என்னுடைய பி ஆர் ஓ, சரவணனை காண்பித்து இவரிடம் மட்டும் பேச்சு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார். காரணம், அமீர் அண்ணனோட பருத்திவீரன் திரைப்பட பிரச்சனைக்கு இவர் எழுதிய கட்டுரை தான் காரணம் என்று சொன்னார். அதற்குப்பின் 2010ல் தான் சரவணனை சந்தித்தேன்.

விழாவில் சசிகுமார்:

என்னிடம், தொடர்ந்து ஏன் சரவணனுக்கு படம் கொடுக்குறீங்க? என கேட்பார்கள். அசோக் இறப்பதற்கு முன்பு என் மாப்பிள்ளைக்கு எதுவும் தெரியாது. அவனை பார்த்துக்கோங்கன்னு 5,6 பேரிடம் சொல்லி இருக்கிறார். என் கூட என்னை பார்த்துட்டு நிற்பது சரவணன் தான். அவருக்காக நான் உயிரையும் கொடுப்பேன்.
படம் கொடுப்பதில் என்ன இருக்கு. அது வெற்றியடைந்தால் என்ன? தோல்வி அடைந்தால் என்ன? நந்தன் படத்தில் நான் சிறிய கதாபாத்திரம் தான் நடிக்கப் போனேன். அப்போ அதில் நடிக்க இருந்த நடிகருக்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் வந்தது.

சங்காரம் கதை:

அவர்தான் தயாரிப்பாளர் என்பதால் நிறைய முதலீடு செய்திருந்தார். அப்ப கூட நான் தான் இந்த கதையில் ஹீரோவாக நடிக்கட்டுமான்னு கேட்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நண்பன் எப்போதுமே நல்ல விஷயங்களை தான் நமக்கு செய்வான். எப்போதுமே சமூக கருத்துக்கள் பேசும் படங்களை தான் சரவணன் எடுப்பார். கமர்சியல் படங்கள் எடுக்க சொல்வேன். ஆனால், அவர் சமூகப் பிரச்சினை பேசும் படத்தை தான் எடுத்திருப்பார். இந்த சங்காரம் கதையை படித்தேன். இது பக்கா கமர்சியலாக இருக்கும்.

https://www.youtube.com/watch?v=FhwjRiLgQl4

சரவணன் பற்றி சொன்னது:

இதை படமாக பண்ணுவோம். நானும் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர், இதை சூரி அண்ணனை நினைத்து எழுதினேன். அதுதான் அந்த கதாபாத்திரத்திற்கு சூரின்னு பெயர் வைத்திருக்கிறேன் என்று சொன்னார். சரி இன்னொரு கதாபாத்திரம் இருக்கு அதில் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். பிறகு இந்த கதையை உன்னி முகுந்தன் கேட்டார். அவருக்கு மார்ட்டின் கதாபாத்திரம் ரொம்ப பிடித்து போய்விட்டது. இந்த சங்காரம் நாவல் கதை வடிவத்தைப் போலத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full