சசிகுமார் நடித்த 'மை லார்ட்' படம் நீதி கிடைத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 13/2/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சசிகுமார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மை லார்ட். இந்த படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம், ஆசா சரத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் கோவில்பட்டி தீப்பெட்டி கம்பெனியில் ஹீரோ சசிகுமார், ஹீரோயின் சைத்ரா இருவரும் வேலை செய்து வருகிறார்கள். இருவருமே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று ஒரு நாள் சைத்ரா மயங்கி கீழே விழுந்து விடுகிறார். பின் அவருடைய உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வருகிறது. இதனால் பயந்து போன சசிகுமார் அவரை உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்த்து விடுகிறார். தன்னுடைய மனைவிக்கு இருக்கும் பிரச்சனையை சரி செய்ய நிறைய மருத்துவமனைகளுக்கு சசிகுமார் ஏறி இறங்குகிறார்.

வட்டிக்கு பணம் வாங்கி எல்லாம் செலவு செய்கிறார். ஆனால், நோய்தான் சரியாகவில்லை. தொடர்ந்து கடன் வாங்கி கொண்டு இருப்பதால் சசிகுமார் ரொம்ப கஷ்டப்படுகிறார். ஒரு கட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேல் கடனாகி வருகிறது. பின் இருவராலும் கடனை அடைக்க முடியாது என தெரிந்து கொண்ட கடன் கொடுத்தவர்கள் இருவருடைய கிட்னியையும் கொடுக்க சொல்லி கேட்கிறார்கள். இதனால் பயந்து கொண்டு ஊரை விட்டு ஹீரோ, ஹீரோயின் இருவரும் வெளியேறுகிறார்கள்.

அந்த சமயத்தில் தீப்பெட்டி ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் ஹீரோ சசிகுமார், அவருடைய மனைவி சைத்ரா இறந்தது போல நாடகத்தை நடத்தி அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் நிவாரண நிதியை வாங்கி கொள்கிறார்கள். இதை அறிந்த ஹீரோ சசிகுமார், சைத்ரா இருவரும் ஊருக்குள் வருகிறார்கள். ஆனால், அந்த கடன் கொடுத்தவர்கள் இருவரையும் துரத்தி அடித்து விடுகிறார்கள்.

அதற்குப்பின் பத்திரிகையாளர் குரு சோமசுந்தரத்தை சந்தித்து நடந்தது எல்லாம் ஹீரோ சொல்கிறார். பின் இருவரும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் உடல்நிலை சரியில்லாமல் கிட்னி கிடைத்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலையில் மத்திய அமைச்சர் போராடி வருகிறார். அப்போது ஹீரோ சசிகுமார் உடைய கிட்னி மத்திய அமைச்சருக்கு சரியாக இருக்கிறது.

இதை அறிந்து மத்திய அமைச்சரின் உறவினர்கள் ஹீரோவிடம் கிட்னி கேட்கிறார்கள். அதற்குப்பின் என்ன நடந்தது? ஹீரோ கிட்னி கொடுத்தாரா? தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றாரா? அவர்களுக்கான நியாயம் கிடைத்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ சசிகுமார், முத்து சிற்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். சில காட்சிகளில் அவருடைய நடிப்பு மெய் சிலிர்க்க வைத்து இருக்கிறது. இதில் ஒரு புது சசிகுமாரை பார்க்க முடிந்தது.

அதேபோல் கதாநாயகி சைத்ரா தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இருவரின் நடிப்புமே பிரமாதமாக இருக்கிறது இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் எடுத்துக்கொண்ட கதையும் அதை கொண்டு சென்ற விதமும் நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த கிட்னி திருட்டு விஷயத்தை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

ஏழை மக்களிடம் இருந்து எப்படி எல்லாம் கிட்னி திருடுகிறார்கள்? பணக்காரர்கள், ஏழைகள் உடைய நிலைமை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறார். அந்த காட்சிகள் எல்லாம் சூப்பராக இருக்கிறது. வசனங்கள் எல்லாம் பட்டை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக இடைவெளிக்கு பிறகு கிளைமாக்ஸ் தூள் கிளப்பு இருக்கிறது. ஆனால், சில இடங்களில் தான் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து இருக்கிறது. இருந்தாலும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் இந்த படம் சசிகுமார்- இயக்குனர் ராஜூ முருகனுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

நிறை:

சசிகுமார் சைத்ரா நடிப்பு அருமை

கதைக்களம் நன்றாக இருக்கிறது

கிளைமாக்ஸ் சூப்பர்

வசனங்கள் பட்டைய கிளப்புகிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

குறை:

சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்திருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் பெரிதாக இல்லை

மொத்தத்தில் மை லார்ட் - நீதிக்கான போராட்டம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full