ஹீரோ லெவலுக்கு மாறிய சதீஷ்.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

By Rajkumar · 4/7/2019

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் தான். இதில் யோகி பாபு பல்வேறு படங்களில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க சதீஷ் மற்றும் சூரி காட்டில் கொஞ்சம் கம்மியாக தான் வாய்ப்புகள் குறைவாக தான் இருந்து வருகிறது.

https://twitter.com/actorsathish/status/1146672520222765056

இருப்பினும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். ஆரம்பத்தில் கிரேசி குழுவில் இருந்து வந்த சதீஷ் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்தில் மோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகசுதர்சன் 'சிறிய இடைவேளைக்கு பின்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் நடிகர் சதீஷ் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ட்விட்டர் வாசிகள் அனைவரும் ஹீரோவாக நடிக்க போகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full