26 வருடம் கழித்து ட்ரெண்ட்டான பாடல், தமிழ் சினிமா பயன்படுத்த தவறிய பாடகர் சத்யன் மகாலிங்கம்
பாடகர் சத்யன் மகாலிங்கம் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ஏ.ஆர் ரகுமான் இசையில் காதலர் தினம் படத்தில் பாடகர் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த ரோஜா ரோஜா பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலம். இன்றும் இந்த பாடல் ரசிகர்கள் மதில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இளைஞன் ஒருவன் இசைக் கச்சேரியில் ரோஜா ரோஜா என்ற பாடலை அசால்டாக பாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லை பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம்.
ரோஜா ரோஜா ரோஜா...
— V News27 (@vnews27) September 8, 2025
26 வருஷம் ஆனாலும் அதே Feel.. | Singer Sathyan | @SatyanSinger | RE-Create#vnews27 #vendhartv #rojaroja #explorepage #trendingsong #exploremoreً #viral_video #explore pic.twitter.com/DpuF5TV2oL
இவருக்கு சின்ன வயதில் இருந்து இசையில் ஆர்வம் கொண்டவர். 15 வயதிலேயே இவர் இசைக் குழுவில் சேர்ந்து கொண்டு பாடி வருகிறார். கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடி இருக்கிறார். பின் இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகராக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சரோஜா படத்தில் தோஸ்த், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாஸு பாஸு, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், மாற்றான் படத்தில் தீய தீயே உட்பட 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
பாடகர் சத்யன் மகாலிங்கம்:
இருந்தாலும் இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு அடையவில்லை. இவர் தொடர்ந்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சத்யன் மகாலிங்கம் 26 வருடங்களுக்கு முன்பு ஒரு இசை குழுவில் பாடி இருந்த ரோஜா ரோஜா என்ற பாடல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே இவரை பற்றி சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்தார்கள். மேலும், இது தொடர்பாக பாடகர் சத்யன் மகாலிங்கம் வீடியோ ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர், 26 வருடங்களுக்கு பிறகு எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
வீடியோவில் சொன்னது:
என்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. பாதம் தொட்ட நன்றிகள் என்றெல்லாம் எமோஷனாக பேசி இருந்தார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சத்யன் மகாலிங்கம், ரோஜா ரோஜா பாடல் மூலம் நான் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாக ஆகுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. நான் கிட்டத்தட்ட 200 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். பல பாடல்கள் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த பாடல்கள் நான்தான் பாடினேன் என்று பலருக்குமே தெரியாது. நான் தமிழில் மட்டும் இல்லை மலையாளம், தெலுங்கு, ஹிந்தி பிற மொழிகளிலும் பாடியிருக்கிறேன்.
சத்யன் பேட்டி:
சமீப காலமாக நான் பாடுவது கிடையாது. காரணம், எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிரபலமாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கிறது. எங்களைப் போன்ற மேடை கலைஞர்களுக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இங்கு நான் மட்டும் இல்லை என்னை போல் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது எல்லாம் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்களே பாட ஆரம்பித்து விட்டார்கள். அது அவர்களுக்கு டேக். ஆனால் எங்களை போன்றவர்களுக்கு அது வாழ்க்கை என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.