பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிப்பது குறித்து சத்யராஜ் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்பக்கம் கட்டி போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

Advertisement

சத்யராஜ் திரைப்பயணம்:

அதிலும் இவர் நடித்த பெரியார் படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது. சொல்லப்போனால் பலரும் இவரை தான் பெரியார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகு பாகுபலி கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கட்டப்பா என்றாலே இவர் தான் நினைவுக்கு வருவார். மேலும், இவர் நடிப்பை தாண்டி எப்போதும் ஒரு பெரியாரிஸ்டாகவும், திராவிட இயக்க ஆதரவாகவும் இருக்கிறார்.

சத்யராஜ் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் நடிகர் சத்யராஜ் அவர்கள் சமீப காலமாகவே விசிக தலைவர் திருமாவளவனை அடிக்கடி சந்தித்து நட்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து பலருமே பலவித கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். தற்போது சத்யராஜ் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Advertisement

மோடி பயோபிக் படம்:

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சத்யராஜ் நடிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரதமர் மோடியின் உடைய வாழ்க்கை வரலாற்று படத்தை இந்தியில் எடுக்க இருக்கிறார்கள். இதில் மோடியாக சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பலருமே சத்யராஜுக்கு வாழ்த்தியும் சிலர் விமர்சித்தும் இருந்தார்கள். ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

சத்தியராஜ் விளக்கம்:

அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை எடுக்க இருப்பதாகவும், இந்த ஆண்டு இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் இது குறித்து சத்யராஜ் கூறியிருப்பது, பிரதமர் மோடியின் உடைய வேடத்தில் நான் நடிக்கிறேன் என்பது உங்கள் மூலமாகத்தான் எனக்கு தெரிந்தது. இது எனக்கு புதிய செய்தி தான். நாத்திகம் பேசிய எம் ஆர் ராதா பல படங்களில் ஆன்மீகவாதியாக நடித்திருக்கிறார். வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement