விஜயை மறைமுகமாக தாக்கி அஜித்தை புகழ்ந்த சத்யராஜ்?- அப்படி என்ன சொன்னார்?

By ·

நடிகர் அஜித்தை பாராட்டி சத்யராஜ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகில் திராவிட இயக்க தமிழர் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 'திராவிடமே தமிழுக்கு அரண்' என்ற தலைப்பில் பேசிருந்தார்கள். இதில் நடிகர் சத்யராஜிம் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், எனக்கு 15 வயது இருக்கும்.

முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி படத்தினுடைய வசனங்கள் கேட்டேன். அப்போது இருந்து எனக்கு தமிழ் மீது அதிக ஆர்வம் வந்தது. கலைஞர் மீதும் காதல் வந்தது. எனக்கு பெரிய உத்வேகம் கொடுத்ததே திராவிட இயக்கங்கள் தான். தமிழ் தேசியம் ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும் தவிர திராவிடத்தை கிடையாது.
மேலும், தம்பி அஜித்குமார் ஒரு வீடியோ போட்டு இருந்தார்.

சத்யராஜ் சொன்ன விஷயம்:

பைக்கில் டூர் போவதை பற்றி அதில் பேசியிருந்தார். சம்பந்தமே இல்லாமல் ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம் தான். ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால், வரப்பு சண்டையுமே இல்லை. ஆனால், அந்த மதம் தான் தேவையில்லாமல் ஒருவருடைய வெறுப்பை உருவாக்குது.

https://www.youtube.com/watch?v=22UL0mwPmx8

அஜித் குறித்து சொன்னது:

மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது. இது ரொம்பவே உண்மை என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி ஒரு அழகான பதிவினை போட்ட நடிகர் அஜித்துக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி நடிகர் சத்யராஜ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக இருக்கிறது.

நெட்டிசன்கள் கருத்து:

இவர் அஜித்தை பாராட்டியும் மறைமுகமாக விஜய்யை விமர்சித்தும் பேசி இருக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள். அதற்கு காரணம், விஜய் தற்போது புது கட்சியை தொடங்கி அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சத்யராஜ் ஏற்கனவே திமுக கட்சியில் இருக்கிறார். இதனால் தான் இவர் விஜய்க்கு எதிராக கருத்துக்களை சொல்கிறார் என்று கூறப்படுகிறது.

சத்யராஜ் குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சத்யராஜ். இவர் “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்பக்கம் இழுத்து போட்டவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் நடிப்பை தாண்டி எப்போதும் ஒரு பெரியாரிஸ்டாகவும், திராவிட இயக்க ஆதரவாகவும் இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full