தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் கட்டப்பா என்ற வார்த்தையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். சத்தியராஜின் படங்கள் எல்லாம் வேற லெவல். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா அவர்கள் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆக இருக்கிறார். சத்யராஜின் மகள் திவ்யா அவர்கள் கொரோனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வு ஒன்றை கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

Advertisement

இதில் அவர் கூறியிருப்பது, கொரோனா வைரஸ் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது மிக முக்கியம். எதிர்ப்பு சக்தியின் மூலம் இந்த கொரோனா வைரஸில் இருந்து விடுபடலாம். இந்த கொரோனா வைரஸ் முதியவர்கள், சிறியவர்களை தான் அதிகம் தாக்குகிறது. உயிர்கொல்லி நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த கொரோனா வைரஸிற்கு இதுவரை சரியான மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் கூட்டமாக இருப்பதை தவிர்ப்பது அவசியம். எங்கு வெளியில் சென்றாலும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என எளிய வழிமுறைகளை கூறியுள்ளார் திவ்யா.

Advertisement

உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள்.

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

Advertisement