கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி - சத்யராஜ் மகள் திவ்யாவின் பேச்சு

By subhashini · 26/4/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சினிமா சத்யராஜ். ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி.

இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார். இவர் நியூட்ரிஷியன் துறையில் எம் ஃபில் பட்டம் பெற்றுள்ளார். இவர் சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தி இருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி ஊட்டசத்துக் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார். அதோடு திவ்யா அவர்கள் மகிழ்மதி என்ற இயக்கம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பலருக்குமே உதவி செய்து வந்தார். அதன்பின் கடந்த இரண்டு வருடங்களாக இவர் திமுக கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

திவ்யா சத்யராஜ் குறித்த தகவல்:

அதுவும் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் விஜயை விமர்சித்து இவர் கூறிய விஷயம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி திவ்யா சத்யராஜ், திருமணம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்று நான் நினைக்கவில்லை. திருமணத்தில் நடைபெறும் வழக்கமான சடங்களான தாலி கட்டுவது, மோதிரம் மாட்டுவது போன்றவற்றிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஜாதகம் பார்ப்பது சடங்குகளை பின்பற்றி நடப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆண்- பெண் இருவருமே ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால் அவர்கள் இணைந்து வாழலாம்.

திவ்யா சத்யராஜ் பேட்டி:

அதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ஒரு வீட்டில் தான் அவர்கள் வாழ வேண்டும் என்று கட்டுப்பாடும் இருக்க வேண்டியதில்லை. அவரவர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தொடரலாம். திருமணம் செய்த பிறகு குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமல் கூட குழந்தையை பெற்றுக் கொள்வதில் எனக்கு முழு சம்மதம். அதனால் எனக்குத் திருமண பந்தத்தில் நம்பிக்கையே கிடையாது. அதேபோல் எனக்கு ஜாதகமே கிடையாது. அதை நான் பெருமையாக சொல்வேன்.
மேலும், நான் காதலிக்கிறேன்.

திருமணம் பற்றி சொன்னது:

அந்த காதலும் தோல்வியில் முடிந்து இருக்கிறது. ஒருபோதுமே என்னுடைய பெற்றோர் முன்பு நான் அதை வெளிக்காட்டியதே கிடையாது. தனிமையில் பல நேரம் நான் அழுது இருக்கிறேன். அந்த தோல்வியை சமாளித்து மீண்டும் நான் வந்திருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளுக்கு எப்போதுமே என்னுடைய அப்பா தடையாக இருந்ததில்லை. சுதந்திரமாக முடிவுகளை எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மகிழ்ச்சி தான் முக்கியம். நான் திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் என்னுடைய விருப்பத்தை தான் அவர் எதிர்பார்ப்பார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full