அன்று விஜய் சொன்ன ஒரு வார்த்தையால் என் வாழ்க்கை மாறி போனது - நடிகர் சத்யராஜ் பகிர்ந்த விஷயம்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சத்யராஜ். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சத்யராஜ்-மணிவண்ணன் கூட்டணியில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் அமைதிப்படை. இந்த படத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, கஸ்தூரி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தை மணிவண்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்தை மீண்டும்
32 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி தான் திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் பேட்டியில் ஹீரோ சத்யராஜ், நான் 75 படம் வில்லனாக நடித்துவிட்டு தான் ஹீரோ ஆனேன். ஹீரோவான பிறகு என்னுடைய அத்தனை படங்களும் ஹிட் தான்.
அமைதிப்படை படம்:
உடன் பிறப்பு படத்தோட சூட்டிங் நடக்கும்போது தான் இந்த கதையை மணிவண்ணன் சார் எனக்கு சொன்னார். அப்போது நான் அவரிடம், தலைவரே நீங்கள் தான் எனக்கு லைஃப் கொடுத்தீங்க. மறுபடியும் வில்லன் ஆக பண்ணனுமா? என்று கேட்டேன். இந்த படத்துக்கு 70 நாள் கால்ஷீட் போச்சு. நிறைய ஜூனியர் ஆர்டிஸ்ட் வைத்து மணிவண்ணன் எடுத்தார். எதற்காக சொந்த படத்துக்கு இவ்வளவு செலவு பண்றிங்க என்று கேட்டேன். அதற்கு அவர், இந்த படத்தோட அறிவிப்பு வந்ததுமே கண்ணா பின்னான்னு வித்து விட்டேன்.
சத்யராஜ் பேட்டி:
40 நாள் மட்டும் சூட் பண்ணினால் தப்பா நினைச்சுப்பாங்கன்னு சொன்னார். அதற்காக அத்தனை நாள் சூட் பண்ணினார். அமைதிப்படை ஒரு கல்ஃப் ஃபிலிம். அதுக்கு முன்னும் பின்னும் இப்படியான ஒரு படம் வரவில்லை. டூ கே கிட்ஸ் எல்லாம் எனக்கு போன் கிடையாது. நான் 20 வருஷமாக கேரக்டர் ரோலில் தான் நடித்திட்டு வந்தேன். ரஞ்சிதா கைலாசாவில் இருக்கிறதாக சொல்றாங்க. அப்படின்னு ஒரு நாடு இருக்கிறதா சொல்றாங்க, அவங்கதான் அந்த நாட்டுக்கு பிரதமர்னு சொல்றாங்க.
https://www.youtube.com/watch?v=n5hdWS0ReFY
விஜய் பற்றி சொன்னது:
ரஞ்சிதா பிரதமர் என்பது உண்மைனா பிரதமர் நடிச்ச ஒரே படம் இதுதான். ஒரே சமயத்தில் நான் ஹீரோவாக நடித்த அத்தனை படங்களும் ஃபிளாக் ஆயிட்டு வந்தது. அப்போ எனக்கு இறங்குமுகம் இருந்தது. அந்த சமயத்தில் விஜய்யிடம் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்? என்று கேட்டதற்கு அப்படி யாரும் இல்லை. ஆனால், சில சமயங்களில் ஒரு வசனத்தை சத்யராஜ் எப்படி பேசுவார் என்று யோசித்துப் பார்ப்பேன். அமைதிப்படை சத்யராஜ் மாதிரி ஒரு கேரக்டர் செய்யணும் எனக்கு ஆசை என்று பேசியிருந்தார். அதற்கு நான் விஜய்க்கு கால் பண்ணி நன்றி சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.