தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். அந்த படத்திற்கு பின்னர் தமிழில் குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘காரியஸ்தன் ‘ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். அந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட இவருக்கு சாட்டை படத்தில் கதாநாயகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : ரகசிய அறையை பயன்படுத்தப்போகும் பிக் பாஸ்.! அதுவும் இவர் தான் செல்லப்போகிறாராம்.!

Advertisement

தமிழில் இதுவரை விரல்விட்டு சொல்லும்படியான படங்களில் நடித்த இவர் இறுதியாக அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணனுக்கு ஜே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்த மஹிமா தற்போது நவ நாகரீக மங்கையாக மாறியுள்ளார். தற்போது இவர் ‘கிட்னா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி இயக்கி வரும் இந்த படம் தமிழ், தெலுகு, கன்னடம் என்று பன்மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisement
Advertisement