இந்த படத்தில் சிஎம் விஜய்யின் தாக்கம் இருக்கும், ஏன்னா - விழாவில் நடிகர் ஜெய் ஓபன் டாக்

By subhashini · 12/5/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சற்றென்று மாறுது வானிலை. இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பாபு விஜய் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மே 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது விழாவில் பேசிய படத்தின் ஹீரோ ஜெய், என் நெஞ்சில் குடியிருக்கும் என்று இப்படி எந்த ஒரு மேடையிலாவது பேச வேண்டும் என்று எனக்கு நிறைய ஆசை. என்னிடம் எனக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் எப்போதுமே நான் சொல்லும் ஒரே பெயர் ஏ ஆர் முருகதாஸ் தான்.

ஜெய் குறித்த தகவல்:

அவருடைய படங்களில் நடிக்கும் போது அவருடைய குணாதிசயங்களையும் பழக்கவழங்களையும் நான் கவனித்து பின்பற்றுவேன். எங்கேயும் எப்போதும் படத்தின் தயாரிப்பாளர் ஏ முருகதாஸ் சார் தான். அவர் அந்த படத்தின் சூட்டின் போது ஒன்னு சொன்னார். அது எப்போதும் நான் பின்பற்றுகிறேன். சூட்டிங் சமயத்தில் சீக்கிரம் தூங்குங்கள், இல்லையென்றால் கண்ணுக்கு கீழ் வரும் கருவளையங்கள் மறைக்க மேக்கப் போட வேண்டியிருக்கும். அது ஒளிப்பதிவாளரின் வேலையையும் பாதிக்கும் என்று சொன்னார்.

ஜெய் பேட்டி:

அவரின் அந்த ஆலோசனையை இன்று வரை நான் கடைப்பிடிக்கிறேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆனால், கூட என் மனைவி கிட்ட முருகதாஸ் சார் சொன்ன விஷயத்தை சொல்வேன். மூக்குத்தி அம்மன் பட மியூசிக் இயக்குனர் தான் இந்த படத்தில் இசை அமைத்திருக்கிறார். முதல் 30 வினாடி இசையை கேட்டபோது அவர் ஒரு திறமையான கலைஞர் என்று நினைத்தேன். அதற்கு சான்று அக்காடி பாடல். மாநாடு படத்தின் ஒளிப்பதிவு தான் இந்த படத்திலும் பணியாற்றுகிறார். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்கும் அர்ப்பணிப்பு வியப்பு குறியது. தயாரிப்பாளர் படத்தின் தரத்திற்கு தேவையான இடங்களில் மட்டுமே செலவு செய்யும் குணம் கொண்டவர்.

https://www.youtube.com/watch?v=G-K5-94z2-s

விஜய் பற்றி சொன்னது:

இயக்குனர் பாபு விஜய் துடிப்பாக வேலை வாங்குவதில் ரொம்பவே திறமையானவர். படப்பிடிப்பின் போது சோர்வு தெரியாமல் வேலை வாங்குவார். ஏ ஆர் முருகதாஸ் சாரின் பட்டறையிலிருந்து வந்தவர். அவரிடம் சினிமாவில் ஒரு தனி தேடல் இருக்கிறது. இந்த படத்தில் தளபதி விஜயின் தாக்கம் இருக்கும். இந்த கதையின் படி நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என்பதால் படத்தின் முதல் பாதியில் அவரை பிரதிபலிக்கும் சில உடல் மொழிகள் வசனங்கள் இருக்கும். ஆனால், இரண்டாம் பாதி சீரியஸான கதையை நோக்கி போகும். இது ஒரு கமர்சியல் படமாக மட்டும் இல்லாமல் கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முயற்சியாக இருக்கும். சற்றென்று மாறுது வானிலை டைட்டிலை போல தமிழ்நாட்டின் சூழல் இப்பொழுது மாதிரி உள்ளது. அது மக்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். படத்தை அனைவரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full