நான்தான் பாடணும்னு மாரி செல்வராஜ் சொன்னார், ஆனால்பைசன்' படம் பற்றி பாடகர் சத்யன் பகிர்ந்த தகவல்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக மாரி செல்வராஜ் திகழ்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மேலும், சமீபத்தில் வெளிவந்த தென்னாட்டு என்ற பாடலை பின்னணி பாடகர் சத்யன் பாடியிருக்கிறார். சமீபத்தில் தான் ரோஜா ரோஜா என்ற பாடலின் மூலம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சத்யன் பிரபலமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவரை பல சேனல்கள் பேட்டி எடுத்திருந்தது. தற்போது இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் பைசன் படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் படம்:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சத்யன், மக்கள் என்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து இருக்கிறார்கள். இந்த அளவற்ற அன்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்படியெல்லாம் எனக்கு லவ் கொடுப்பாங்கன்னு நான் நினைத்து கூட பார்க்கவில்லை. பைசன் படத்தில் வருகிற தென்னாட்டு பாடலுக்கும் நல்ல விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள். அந்த அன்பு தான் இன்னும் ஹிட் பாடல்களை தரணும்னு தெம்பை தருகிறது. இந்த பாடலுக்கான ரெக்கார்டிங் போன வாரம் தான் நடந்தது. என் பாடல் தொடர்பாக நான் சந்தோஷுக்கு மெசேஜ் செய்திருந்தேன்.
சத்யன் பேட்டி:
அந்த நேரத்தில் தான் பைசன் படத்தின் பாடலை பற்றி என்னிடம் அவர் சொன்னார். பிறகு நிவாஸ் கே பிரசன்னா எனக்கு கால் பண்ணி இந்த பாடல் தொடர்பாக பேசினார். நான் என்னுடைய ஸ்டூடியோவில் அந்த பாடலை ஓரிரு வரிகள் பாடி அனுப்பினேன். அதைக்கேட்ட மாரி செல்வராஜ், நான் தான் பாடலை பாடணும் என்று முடிவு பண்ணிவிட்டார். நிவாஸ் பிரசன்னாவும் எனக்கு சப்போர்ட் செய்தார். நிவாசை எனக்கு இதற்கு முன்பே தெரியும். அவருக்கு இசை மீது அதிக நாலேஜ் இருக்கிறது.
கம்பேக் பற்றி சொன்னது:
இதற்கு முன்பே அவருடன் சேர்ந்து பணியாற்ற கேட்டிருந்தேன். அதற்கு அவர், கட்டாயம் ஒரு காலம் வரும் சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னார். ஆனால், இது இப்போ நடந்திருக்கிறது. இனியும் எங்க பயணம் தொடரும். என்னுடைய பசிக்கு இந்த பாடல் தீனி போட்டு இருக்கு என்று சொல்லலாம். நான் இந்த இடத்தில் தான் இருந்தேன். ஆனால் யாருக்குமே தெரியாமல் இருந்தது. இப்போ வெளிச்சம் என் மேல் பட்டதும் நான் எல்லோருடைய கண்ணுக்கும் தெரிகிறேன். யாரும் என்னை ஒதுக்கவில்லை. நான் இந்த சான்சை பயன்படுத்தி மேலே வரணும்னு நினைக்கிறேன். இனிமேல் எந்த வாய்ப்புகளையும் தவறவிடக்கூடாது என்று எண்ணத்தோடு தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.