தென்னிந்திய சினிமா துறை உலகில் பிரபலமான கருநாடக இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் அவர்கள் திடீரென்று இன்று(அக்டோபர் 11) அதிகாலை காலமானார். கத்ரி கோபால்நாத் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர். இவரது பெற்றோர் தனியப்பா, கங்கம்மா ஆவர். மேலும், கோபால்நாத் தந்தை ஒரு நாதஸ்வர வித்துவான். இவருக்கு சரோஜினி என்ற மனைவியும், இரண்டு மகன்கள்,ஒரு மகளும் உள்ளார்கள். ஒரு மகன் துபாயில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார், இன்னொரு மகனான மணிகாந்த் கத்ரி தன் தந்தையைப் போலவே இசையமைப்பாளராக உள்ளார்.மணி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து வருகிறார்.

கோபால் நாத்துக்கு எப்படி இந்த சாக்ஸ் போனின் மேலே ஈர்ப்பு வந்தது என்று பார்த்தால், ஒரு முறை மைசூர் அரண்மனையில் இசை குழு ஒன்று சாக்ஸ் போனை வாசித்தார்கள். அப்போது அந்த இசையால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகத்தான் சாக்சபோன் கற்று சிறந்த கலைஞராக இருகின்றார்.முதலில் கலாநிகேதன் அமைப்பை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அய்யரிடம் இருந்து சாக்ஸ்போன் இசைக் கலையை வாசிப்பை கோபால்நாத் கற்றுக்கொண்டார். பின்னர் சென்னையில் உள்ள மிருதங்க இசை கலைஞர் டி .வி. கோபாலகிருஷ்ணனிடம் இருந்து கூட இசைப்பயிற்சி பெற்றார்.மேலும், கத்ரி கோபால்நாத் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை செம்மை நினைவு அறக்கட்டளையில் தான் தொடங்கினார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து 1980ஆம் ஆண்டு நடந்த ‘பாம்பே ஜாஸ்’ இசை விழாவில் தான் இவருடைய இசைப் பயணத்தில் திருப்பங்கள் அமைந்தது. அதோடு தமிழ் சினிமா துறையில் புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தரின் உதவியால் “டூயட்” எனும் படத்தில் ஏ.ஆர். ரகுமான் உடன் இணைந்து பணியாற்றினார்.முதலில் கத்ரி கோபால்நாத் அவர்கள் ஏ.ஆர். ரகுமானுக்கு சுமார் 30 வகையான ராகங்களை வாசித்து காட்டினார். ஆனால்,ஏ.ஆர். ரகுமான் திருப்தி அடையவில்லை. கடைசியாக “கல்யாண வசந்தம்” என்ற ராகம் வாசித்துக் காட்டிய உடனே ஏ.ஆர். ரகுமான் அதிக அளவு ஆனந்தமடைந்தார், அதற்குப் பின்னர்தான் டூயட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இவர் டூயட் படத்தில் வரும் அனைத்து பாடல்களிலும் சாக்சபோன் இசையை பயன்படுத்தி உள்ளார். மேலும், அப்பாடல்களில் ‘கல்யாண வசந்தம்’ என்ற ராகம் தான் பயன்படுத்தப்பட்டது.

இந்த படத்தின் மூலம் தான் அவருக்கு சினிமா உலகில் பல வாய்ப்புகள் கிடைத்தது என்று கூட சொல்லலாம்.அது மட்டுமில்லாமல் கத்ரி கோபால்நாத்தின் இசை புலமையைப் பாராட்டி இந்திய அரசாங்கம் 2004ஆம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கியது. அதோடு தமிழக அரசு கலைமாமணி பட்டத்தை அவருக்கு வழங்கி கௌரவித்தது. இவர் ஜாஸ்புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஜேம்ஸ் உடன் இணைந்து சதர்ன் பிரதர்ஸ் என்ற இசை தொகுப்பையை வெளியிட்டார்.இவர் இந்தியாவில் மட்டும் இல்லங்க அமெரிக்கா, கனடா என பல வெளிநாடுகளுக்கும் சென்று தன் இசை திறமையை காட்டி உள்ளார். இவர் சாக்சபோன் சக்கரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட் என பல பட்டங்களை வாங்கியுள்ளார். இவருக்கு 2018 ஆம் ஆண்டு கம்பன் புகழ் விருதை அகில இந்திய கம்பன் கழகம் வழங்கியது.

Advertisement

மேலும், இந்த டூயட் படத்திற்கு பிறகு தான் சினிமா உலகில் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. இதனால், பெருமகிழ்ச்சி அடைந்தார் என்று ஒருமுறை தெரிவித்திருந்தார். தற்போது உடல்நிலை குறைவால் கத்ரி கோபால்நாத் அவர்கள் மங்களூரில் உள்ள ஏ.ஆர்.தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி காலை 4.45 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் இறப்பு இசை உலகையே உலுக்கும் அளவிற்கு இருக்கிறது. மேலும் கர்நாடக மக்களும் இசைக்கலைஞர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அ வர்களோடு கோபால்நாத் மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உட்பட பல பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement