சீமான் மீதான நடிகை விஜயலட்சுமியின் புகார் ஊட்டி விரைந்ததனிப்படை போலீசார் – காரணம் என்ன தெரியுமா ?

By S.Dhilip Kumar · 3/9/2023

பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார்.

அதில் தன்னை சீமான் காதலித்த நிலையில் இருவரும் 2008 ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி கொண்டதாகவும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாகவும் இதையடுத்து வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் பலமுறை தான் கர்ப்பம் அடைந்த நிலையில் அவரது வற்புறுத்தலால் கருவை கலைத்ததாக குற்றம்சாட்டினார்.

மேலும், தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அந்த வழக்கானது அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதே புகார் மனு அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து பேட்டி அளித்திருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை செய்ய கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை கமிஷனர் உத்தரவிட்ட நிலையில் நேற்று முன் தினம் மாலை நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிசனர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 6 மணி நேரத்திற்கும் செயலாளர் நடைபெற்ற சோதனையின் போது விஜயலட்சுமி போலீசின் நிலையத்திலிருந்து வெளியே வராமல் இருந்தார். மேலும் விசாரணையின் போது அவருக்கு சற்று மயக்கம் ஏற்பட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போலீஸ் நிலையிலிருந்து செல்வேன் என விஜயலட்சுமி அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.அதன் பின் வெளியே வந்த அவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்.

ஊட்டி விரைந்த தனிப்படை:

தற்போது சீமான் ஊட்டியில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தனிப்படை ஒன்று ஊட்டிக்கு விரைந்துள்ளது திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Tamil Behind Talkies AMP · Quick view
View full