குடிபோதையில் தள்ளாடிய பாலிவுட் நடிகரின் முன்னாள் மனைவி, எப்படி சமளித்துள்ளார் பாருங்க - வைரலாகும் வீடியோ

By subhashini · 27/11/2022

பிரபல பாலிவுட் நடிகரின் முன்னாள் மனைவி குடிபோதையில் தள்ளாடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே, சினிமா நட்சத்திரங்கள் பலர் பார்ட்டிகளில் கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். அதிலும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

அது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பார்ட்டிகளால் பல பிரபலங்கள் பல சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட ஷாருக்கானின் மகன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி இருந்தார். பின் பல போராட்டங்களுக்கு பின் அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.

கரண் ஜோகர் கொடுத்த பார்ட்டி:

இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி பாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொண்டு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. இந்த நிலையில் பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரண் ஜோகர் பார்ட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார்.

https://www.youtube.com/watch?v=miK_jBaKfq4

சோகேல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவ்:

மேலும், இவர் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இவர் பார்ட்டி ஒன்று நடத்தி இருக்கிறார். அதில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் பாலிவுட் நடிகர் சோகேல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவும் கலந்து கொண்டிருந்தார். சீமா அவர்கள் பார்ட்டில் அதிகளவில் குடித்து இருக்கிறார்.

போதையில் தள்ளாடிய சீமா:

பின் பார்ட்டி முடிந்து வெளியே வந்தவுடன் புகைப்படக் கலைஞர்கள் சீமாவிடம் போஸ் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள். அப்போது அவர் தள்ளாடிய நிலையில் போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோவும், புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலருமே சீமாவை விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full