விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் குறித்து கேள்வி கேட்டதால் கடுப்பாகி இருக்கிறார் சீமான். தற்போது சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருந்தவர்கள். இடையில் இவர்கள் யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இது குறித்து நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி இருந்தார்.பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள்.

இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். இதற்காக இருவரும் திருச்சியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தார்கள். பலரும் எதிர்பார்த்தது போல இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறவில்லை.மேலும், இவர்களின் திருமண விழா நேற்று முன் இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

இதையும் பாருங்க : பழைய விக்ரம் படத்தில் கமலுக்கு சிவாஜி செய்த உதவி போல புதிய விக்ரமில் லோகேஷ்க்கு கமல் செய்த உதவி – ஒரு சுவாரசிய தகவல்.

Advertisement

பல கட்டுப்பாடுகளுடன் நடந்த திருமணம் :

அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் ஜோடி :

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமணத்திற்கு முன்பில் இருந்தே இவர்கள் திருமணம் பற்றிய தகவல் தான் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் நயன்தாரா திருமணம் குறித்து கேட்ட கேள்வியால் கடுப்பாகி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள சீமான். தொலைக்காட்சி விவாதங்களில் என்ன நடக்கிறது? நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா என்பது போன்ற விவாதம் நடக்கிறது.

Advertisement

நயன் திருமணம் குறித்து சீமான் :

என்னிடமே ஒருவர், அந்த திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார், அதற்கு வேறு எதாவது கேளப்பா என சொன்னேன். அவனுக்கு பேசுறதுக்கு செய்தி கிடையாது. இங்கு எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் போற்றப்படுவது இல்லை. தேவநேயப் பாவாணர் எம் ஜி ஆர் நடத்திய உலக தமிழர் மாநாட்டில் பேசிய போது அவர் பேச்சை கவனிக்காமல் கூட்டம் கலைந்து போன மன வலியில் தான் அவர் இறந்து போனார்.

Advertisement

சபிக்கப்பட்ட ஒரு இனமாக நாம் இருக்கிறோம் :

அந்த நிலைமை தான் இது. தனி ஒரு மனதினுக்கு உணவில்லையே ஜகத்தை அழித்துவிட வேண்டும் என்று எழுதிய பாரதியையே பட்டினி போட்டவர்கள் தானே இந்த நாட்டினர். உயிரோட இருக்கும் போது பைத்தியக்காரன், செத்தால் மகாகவி. இந்த தலைமுறை தமிழ் பிள்ளைகள் போற்றிக் கொண்ட வேண்டியவர்கள் பலர் இருக்கின்றனர். அதை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது சபிக்கப்பட்ட ஒரு இனமாக நாம் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் சீமான்.

Advertisement