இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்ற எண்ணம் வந்தது - ரஜினி பற்றி சீமான் சொன்ன விஷயம்

By subhashini · 25/4/2025

தேவயானியின் நிழற்குடை பட விழாவில் சீமான் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் தேவயானி நடித்திருக்கிறார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தேவயானி குறித்த தகவல்:

வெள்ளித்திரை மட்டுமில்லாமல் இவர் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் 6 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இதை அடுத்து இவர் சீரியல், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தேவயானி அவர்கள் நிழற்குடை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தர்ஷன் ஃபிலிம் சார்பில் ஜோதி ஜீவா என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை சிவா ஆறுமுகம் என்பவர் எழுதி இயக்கி இருக்கிறார்.

விழாவில் சீமான்:

இந்த படத்தில் விஜித், கண்மணி, இளவரசு, ராஜ் கபூர், வடிவுக்கரசி, நீலிமா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வரும் மே 9ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. அதில் நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் கலந்து கொண்டிருந்தார். அப்போது சீமான், தேவயானி நடித்தாலே அது நல்ல கதையாகவும், படமாகவும் தான் இருக்கும் என்று மக்களிடம் ஒரு கருத்து இருக்கிறது.

தேவையானி பற்றி சொன்னது:

அதற்கு காரணம் அவர் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்கள் தான். தேவயானி நடித்த சூரிய வம்சம், காதல் கோட்டை போன்ற படங்கள் எல்லாம் இன்று மக்கள் மத்தியில் பேசப்பட்ட தான் இருக்கிறது. அவர் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு படத்தை பதிய வைத்திருக்கிறார். காசுக்காக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அந்த பெயர் தான் 30 வருடங்களுக்கு மேலாக இந்த திரைத்துறையில் நீடிக்க வைத்திருக்கிறது. மேலும், நிறைய கலைஞர்கள் இந்த சினிமாத்துறைக்கு வந்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=AlHHBBJvJ_E&t=3s

ரஜினிகாந்த் பற்றி சொன்னது:

ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்து பேசினேன். இரண்டரை மணி நேரம் நாங்கள் இருவரும் பேசி இருப்போம். பல படங்கள் நடித்து சாதித்த பிறகும் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. அதைப் பார்த்து தான், இவர் ஏன் ஜெயிக்க மாட்டார் என்ற எண்ணம் எனக்கு வந்தது. சோம்பேறிகள் கூட அவர் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்தால் இயங்கி விடுவார்கள். இந்த மாதிரி தேடலும் வெறியும் இருக்கின்ற ஒவ்வொருவருமே உச்சத்தை தொடலாம், சாதிக்கலாம். மேலும், இந்த நிழற்குடை படத்தில் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். அவர்களும் நிச்சயம் சாதிப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full