விஜயகாந்த் வலிமையாக இருந்தார். விஜய் இதை செஞ்சா தான் வெற்றியை நெருங்க முடியும் - விஜய் பேச்சு குறித்து சீமான்
பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட அவரது படங்கலின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு தான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறும் குட்டி ஸ்டோரி தான் இந்த விழாவில் ஹைலைட்டாக அமையும் அந்த வகையில் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருந்ததால் லியோ படத்தின் இசை நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகப்படியான பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பை மனதில் கொண்டும் ரத்தாகி இருக்கிறது என்று படக்குழு அறிவித்து இருந்தது.
https://twitter.com/a_vijayaragavan/status/1719957142093144563
இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி பெரும் வைரலாகி வருகிறது. அதிலும் 'புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்...தளபதிக்கு அர்த்தம் தெரியுமா... நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி என்றும் குறி இருந்தார்.
இதெற்கெல்லாம் தாண்டி இந்த விழாவில் தொகுப்பாளர்களான மிர்ச்சி விஜய்யும், டிடியும் விஜய்யிடம் ரேபிட் பையர் பாணியில் சில கேள்விகளை கேட்டனர்.அதில் 2026 என கேட்ட கேள்விக்கு விஜய்," 2026...2025க்கு அப்புறம் வர்ற வருஷம்." என பதிலளித்தார். "வேற எதாவது சீரிஸாக கேட்கிறோம் ணே...." எனக் கேள்வியைத் தொடர்ந்தார். இதற்கு விஜய் ," 2026ல ஃபுட்பால் வொர்ல்ட் கப் வருது, நீ வேணா செக் பண்ணி பாரு ப்ரோ." எனக் கூற மேலும் கேள்வியை தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் தொடர்ந்தார்.
https://www.youtube.com/watch?v=Rp-n0h97Mb8
இறுதியாக ," கப்பு முக்கியம் பிகிலு" என விஜய் கூற அரங்கமே கரகோஷத்தால் நிரம்பியது. இப்படி விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்து இருக்கும் நிலையில் தற்போது அரசியல் விமர்சங்களும் விஜய் மீது மீண்டும் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பல்வேறு அரசியல் பிரபலங்களிடம் செய்தியாளர்கள் அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
சீமான் கருத்து :
அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சீமானிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டு இருந்ததற்க்கு ' விஜய் அரசியலுக்கு வந்தார் அவரை தட்டிக்கொடுப்போம். எந்தவொரு தலைவனின் வருகைக்காகவும் வரலாறு காத்திருந்ததில்லை. இருக்கிறவர்களில் ஒருத்தரை அதுவே தேர்வுசெய்து கையைப் பிடித்து நடத்திச் சென்றுவிடும். அதில், அவரும் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான வேலைகளைச் செய்கிறார், வரட்டும்.
https://www.youtube.com/watch?v=mZ2Ao3zdGeg
என்னென்ன கோட்பாடுகள், என்னென்ன கொள்கைகளை முன்னிறுத்துகிறோம் என்பதை மக்கள் ஏற்கும்போதுதான், அது வெற்றிபெறும். அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. தி.மு.க-விலிருந்து வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆரே கட்சி தொடங்க பயந்தார். மீண்டும் தி.மு.க-வுடனே இணைந்துவிடலாம் என்றெல்லாம் பெரும் முயற்சி செய்தார். பிறகு, கருணாநிதி மட்டுமே இருந்ததால் அவரை எதிர்க்க ஓர் ஆள் தேவைப்படுதே என்று அவரே வந்தார்.
விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துகள்
எம்.ஜி.ஆரைப் பார்த்து என்.டி.ஆர் கட்சி தொடங்கினார். அதன் பிறகு அங்கு வந்த சிரஞ்சீவியோ, பவன் கல்யாணோ அந்த அளவுக்குச் செல்ல முடியவில்லை. இங்கேயும் விஜயகாந்த் வலிமையாக இருந்தார். ஆனால், விஜயகாந்த் நின்று சண்டை செய்யாமல், ஜெயலலிதாவிடம் கூட்டணிக்குச் சென்றதால் சரிந்தார். எனவே, நின்று சண்டை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை நெருங்க முடியும். ஒரே நாளில் வெற்றி என்பதையெல்லாம் சாத்தியப்படுத்த முடியாது. எனவே, விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.