'128 வழக்க விட்டுட்டு இந்த வழக்க வச்சி என்ன அசிங்கபடுத்த பாத்தாங்க' - விசாரணைக்கு பின் தன் மனைவியுடன் அளித்த பேட்டி இதோ.

By subhashini · 18/9/2023

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் சீமான் தன்னுடைய மனைவியுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சீமான்- விஜயலட்சுமி குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் விஜயலக்ஷ்மி-சீமான் குறித்த சர்ச்சைகள் தான் எழுந்த வண்ணம் இருக்கிறது.

பின் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்று விஜயலக்ஷ்மி வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

விஜயலட்சுமி அளித்த புகார்:

ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். பின் சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த எந்த சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. பின் இது குறித்து சில நாட்களுக்கு முன்பு ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் துணை கமிஷனர் உரிமையாளர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார்.

போலீஸ் விசாரணை:

பின் திருவள்ளூர் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்து இருந்தார். இதை அடுத்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், சீமான் ஆஜராகவில்லை. இது குறித்து மீண்டும் விஜயலக்ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பின் இரண்டாவது முறையாக சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=cJApc8QQip0

வாபஸ் வாங்கிய விஜயலக்ஷ்மி:

இதனை அடுத்து சில தினங்களுக்கு முன் விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தான் கொடுத்த புகார் மனுவை வாபஸ் வாங்கி இருக்கிறார். பின் இவர், இந்த புகார் வாபஸ் வாங்க யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இதற்காக நான் பணமும் வாங்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை. சீமான எதிர்த்துக் கொள்ள எனக்கு போதிய ஆதரவும் இல்லை என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.

ஆஜரான சீமான்:

இப்படி திடீரென்று விஜயலட்சுமி பல்டி அடித்ததற்கு காரணம் என்ன என்று சோசியல் மீடியாவில் பலரும் விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னுடைய மனைவியுடன் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி இருக்கிறார். மேலும், சீமான் ஆஜரானதை தொடர்ந்து காவல் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சீமான் உடன் வழக்கறிஞர் உட்பட ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்து இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=OMlCBRivuYc

இப்படி ஒரு நிலையில் விஜயலக்ஷ்மி அளித்துள்ள பேட்டியில் நான் மன்னித்து விட்டது போல இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டால் நல்லது அப்படி இல்லாமல் என்னை மிரட்டினால் என் அக்காவை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன். நான் வழக்கை வாபஸ் வாங்குவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அதே போல எனக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்தால் நான் கடைசி கட்டமாக அதை செய்துவிட்டு நான் போய் விடுவேன் அந்த சூழ்நிலைக்கு யாரும் என்னை தள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்

behindtalkies AMP · Quick view
View full