வெற்றிமாறன் எவ்வளவோ கேட்டும் விடுதலை படத்தில் நடிக்க மறுத்துள்ள சீமான் - அதுவும் எந்த ரோலில் தெரியுமா?

By ·

விடுதலை படத்தில் சீமான் நடிக்க மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார்.

மேலும், படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

விடுதலை படம்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல முதல் பாகத்தில் விஜய் சேதுபதி குறித்த பின்னணி காட்டப்படவில்லை. ஆக, இரண்டாம் பாகம் முழுவதும் விஜய் சேதுபதி உடைய பங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

அதேபோல் இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடித்த ரோலில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, விஜய் சேதுபதி இந்த படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் பாரதிராஜா தான்.

விஜய் சேதுபதி கதாபாத்திரம்:

அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இயக்குனர் வெற்றிமாறன் கேட்டிருக்கிறார். ஆனால், சீமான் நடிக்க மறுத்திருக்கிறார். காரணம், இந்த படத்திற்காக தாடி வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் சீமான் முடியாது என்று மறுத்திருக்கிறார். அதோடு வேறு சில காரணங்களாலும் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சீமான் விலகி இருக்கிறார்.

சீமான் மறுத்த காரணம்:

இதை சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் சீமான் கூறி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் விஜய் சேதுபதி நடித்த ஒப்பந்தமானார். முதலில் இந்த படத்திற்காக பத்து நாட்கள் தான் விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் வாங்கி இருந்தார்கள். தற்போது 100 நாட்களுக்கும் மேல் விஜய் சேதுபதியை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அதோடு விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full