பாசம் பொழிந்த பச்சோந்தி, சாக்கடையில் கால் போடலாமா - சீமானை பொளந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது 'ஜனநாயகன்' என்ற படத்தில் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இதை அடுத்து படத்தின் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். அதன் பின் சமீபத்தில் இவர் தன்னுடைய இரண்டாவது மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தி இருந்தார்.
விஜய் அரசியல்:
அதற்குப் பிறகு விஜய் குறித்து நிறைய விமர்சனங்கள் வருகிறது. குறிப்பாக, விஜய் களத்தில் வந்து மக்களை சந்திக்கவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தது. அதை தவிடு பொடி ஆக்கும் வகையில் தற்போது விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதன் முதலில் இவர் திருச்சியில் தான் தன்னுடைய பிரச்சார கூட்டத்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து விஜய்க்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக உட்பட கட்சிகள் எல்லோருமே பேசி வருகிறார்கள். மாநாட்டை விட பிரச்சாரத்தை விஜய் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்ததும் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டத்தை பார்த்தும் மற்ற கட்சிகள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
சீமான் அட்ராசிட்டி:
அதோடு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களுமே செய்தியாளர்களை சந்தித்து விஜய் குறித்து பேசி வருவது தான் தற்போது சோசியல் மீடியாவில் வைராக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், விஜயை ரொம்பவே கடுமையாக விமர்சித்திருக்கிறார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதோடு சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலினை சீமான் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு தான் இவர் விஜயை அதிகமாக அட்டாக் செய்து வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், விஜய்யை ஶ்ரீமான் எவ்வளவு திட்டினாலும் அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை.
விஜய்யை ஶ்ரீமான் எவ்வளவு திட்டினாலும்.. அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 15, 2025
இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி.. தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.
இந்த…
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி.. தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட். இந்த சாக்கடையில் கால் வைக்காமல் தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது. 15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயசு பெருசு.. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள். விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்புவரை பாசம் பொழிந்த பச்சோந்தி. தற்போது நிறம் மாறியுள்ளது. தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அதிதீய சக்தி இது. 2026 தேர்தலில் தர்ம அடி தந்து மக்கள் புறந்தள்ளுவார்கள் என நம்புவோம். இக்கட்சியின் தொண்டர்கள். இனியும் இவரை நம்பாமல் உருப்பட்டு உயருங்கள் என்று கூறி இருக்கிறார்.