சமையல் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய சீதா, சேனல் தரப்பில் சொன்ன காரணம்- அடடே, அடுத்து இவர் தானா

By subhashini · 22/10/2024

சமையல் நிகழ்ச்சியில் இருந்து திடீரென நடிகை சீதா விலகி இருக்கும் தகவல்கள் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாகவே சின்ன திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனால் வித்தியாசமான கான்செப்டில் ஒவ்வொரு சேனலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி, சன் டிவியில் டாப் குக்கு டூப்பு குக்கு என்று பெயரில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழிலும் கிச்சன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சமையல் நிகழ்ச்சி சமீபத்தில் தான் தொடங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகை சீதா களம் இறங்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சீதா சின்ன திரையில் என்ட்ரி கொடுத்திருந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருந்தது.

சமையல் நிகழ்ச்சி:

அது மட்டும் இல்லாமல் நடிகை சீதா உடன் கிருஷ்ணா மெக்கன்சி என்பவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே சீதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார். இது குறித்து பலருமே கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சேனல் தரப்பில் கூறியிருப்பது, சமீப காலமாகவே எல்லா டிவி சேனல்களிலும் சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஆர்வம் கொடுக்கிறார்கள். அதற்கு காரணம் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு தான்.

சேனல் தரப்பு அளித்த பேட்டி:

ஜீ தமிழிலும் இதற்கு முன்பு சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தான் சமையல் எக்ஸ்பிரஸ் என்ற சமையல் நிகழ்ச்சியை தொடங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சீதா பங்கு பெற்றிருந்தார். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு இவர் வர மறுத்தார். பின் சேனல் தரப்பில் பேசியதால் சீதாவும் ஒத்துக்கொண்டார். ஆனால், நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் தொடங்கியதில் இருந்தே பிரச்சனையுமே தொடங்கிவிட்டது என்று தான் சொல்லணும்.

நிகழ்ச்சியை விட்டு விலகிய சீதா:

நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட்டிங்கில் சீதா தொடர்பான காட்சிகளையும் தனியாகவும், இன்னொரு விருந்தினராக இருக்கும் புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்ஷியினுடைய காட்சிகளை தனியாகவும் தான் எடுத்தார்கள். இதற்கு காரணம் கிருஷ்ணா மெக்கன்சி தரப்பில் போட்ட கண்டிஷன்கள் என்று கூறப்படுகிறது. ஆரம்பமே சலசலப்புடன் தான் தொடங்கப்பட்டது. வேறு வழி இல்லாமல் சேனலும் சகித்துக் கொண்டு நிகழ்ச்சியை தொடங்கினார்கள். இதெல்லாம் சீதாவிற்கு அப்செட்டை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சேனல் தரப்பு எடுத்த முடிவு:

அதனை எடுத்து பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் இந்த நிகழ்ச்சியை ஒரு வழியாக டிவியில் ஒளிபரப்பினார்கள்.நிகழ்ச்சி தொடங்கிய இரண்டே வாரத்தில் சீதா சூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதால் சேனல் தரப்பே அவருக்கு பதிலாக வேறு ஒருவரை கமிட் செய்திருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தான் சீதாவுக்கு பதில் கமிட் செய்து இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள். நடிகை சுஜிதா இதற்கு முன்பு இவர் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full