நெகட்டிவ் எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்கள் - ரசிகர்களுக்கு செல்வராகவன் சொன்ன அறிவுரை
எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்பாக மக்களுக்கு நடிகர் செல்வராகவன் அளித்திருக்கும் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.
செல்வராகவன் குறித்த தகவல்:
மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது . அதன் பின் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருகிறேன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.
செல்வராகவன் திரைப்பயணம்:
மேலும், கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் 7ஜி ரெயின்போ காலனி படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் படத்தினுடைய இரண்டாம் பாகத்திற்கான வேலையிலுமே செல்வராகவன் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.
செல்வராகவன் வீடியோ:
இது ஒரு பக்கம் இருக்க சமீபகாலமாகவே செல்வராகவன் அவர்கள் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். இவர் தன்னுடைய படத்தின் அப்டேட், சமூகத்திற்கு தேவையான சில தகவல்களை எல்லாம் பகிர்ந்து வருவார். இப்படி இருக்கும் நிலையில் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவுரை கூறும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவன் போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களுக்கு சொன்ன அறிவுரை:
அதில் அவர், நம்முடைய வாழ்க்கையில் எதிர்மறையாக எது நடந்தாலுமே கடவுளே நீ அதை பார்த்துக்கொள் என்று சொல்லி பழகுங்கள். அதை கடவுள் பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள். அப்படி செய்தால் கொஞ்ச நாட்களிலேயே நெகட்டிவான எண்ணங்களில் தீவிரம் குறைந்து நல்லதே நடக்கும். ஆரம்பத்தில் இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், ஒரு சில சமயத்தில் உங்களுக்கு முழு நம்பிக்கை வரும், முயற்சி செய்து பாருங்கள் நடக்கும் என்று கூறி இருக்கிறார்.