ரெண்டு கல்யாணம் பண்ணுனப்போ குஜாலா இருந்துச்சோ - செல்வராகவன் ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 27/9/2021

தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி  கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின்  முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார். தமிழில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இன்று வரை பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

https://twitter.com/kris180775/status/1441663865436008449

இயக்குனர் செல்வராகவனுக்கு, நடிகை சோனியா அகர்வாலுக்கு திருமணம் ஆகி பின்னர் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார்.

அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஓம்கர் என்ற மகனும் பிறந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாம் குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று புணித தளத்தின் பெயர் வைத்தனர். இந்த நிலையில் செல்வராகவன் தனது இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் தனிமையை பற்றி செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் தான். அந்த ட்வீட்டில் , இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி என்று பதிவிட்டு இருக்கிறார்.

https://twitter.com/BulletinTwits/status/1441670107550212100

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் போட்டு இருந்த ட்வீட்டில், உனக்கு நீ மட்டும்தான் துணை என்று பதிவிட்டு இருந்தார். செல்வராகவனின் இந்த ட்வீட்டிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் என்ன விவாகரத்து செய்யப் போகிறீர்களா ? என்றெல்லாம் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ ரெண்டு கல்யாணம் பண்ணுனப்போ குஜாலா இருந்துச்சோ என்று கலாய்த்து இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full