ஆயிரத்தில் ஒருவன் 2ல் கார்த்தியா? தனுஷா? சுடசுட அப்டேட் சொன்ன இயக்குனர் செல்வராகவன்

By subhashini · 5/4/2025

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்யாசமான மற்றும் தரமான படங்களை கொடுப்பதில் இயக்குனர் செல்வராகவனுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. காதல் கொண்டேன் படம் துவங்கி NGK வரை இவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்.

அப்போதே பிராம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் செல்வராகவனின் ஒரு கனவு படம் என்றே கூறலாம். இந்த படம் நடிகர் பார்திபனுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்த படத்தில் ஆண்ட்ரியா, ரீமா சென், கார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படம் வெளியான போது பெரிதாக வரவேற்கப்படவில்லை. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரீ – ரிலீஸ் ஆகி இருந்தது. அப்போது இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆயிரத்தில் ஒருவன் 2:

15 ஆண்டுகள் கழிந்தாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் கேட்டு இருந்தார்கள். பின் இது தொடர்பாக போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் முதல் பாகத்தில் நடித்த கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்த பிறகு படம் தொடர்பாக எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை.

செல்வராகவன் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போது கொண்டாடுகிறார்கள். ஆனால், அதை பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே ஒன்றும் தோன்றவில்லை. எனக்கு சந்தோசமும் இல்லை, சோகமும் இல்லை. ஆயிரத்தில் ஒருவன் ரீ ரீலீஸ் ஆன பொழுது அதற்கான வரவேற்பு ரொம்ப பயங்கரமாக இருந்தது. படத்தை மீண்டும் பார்த்து ரசிகர்கள் எல்லோருமே, எங்களை மன்னித்து விடுங்கள். அந்த நேரத்தில் படத்தை கொண்டாடாமல் விட்டு விட்டோம் என்றெல்லாம் கையெழுத்து கும்பிட்டு இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=l5ZyyhGLTmM

ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றி சொன்னது:

இப்போது நான் போகும் இடங்களில் எல்லாம் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பற்றி தான் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் 2ல் தனுஷ் தான் நடிக்கிறார் என்று முடிவு செய்து ஒரு வாரம் அதற்கான வேலை செய்தோம். ஆனால், அதில் நாங்கள் செய்த தவறு என்னவென்றால், அதை நாங்கள் அறிவிப்பாக வெளியிட்டது தான். அதை நாங்கள் சீக்கிரமாகவே வெளியிட்டு விட்டோம் என்று நினைக்கிறோம். கொஞ்சம் தாமதமாக வெளியிட்டு இருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நிச்சயமாக கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை செய்யவே முடியாது.

படம் அப்டேட்:

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை மீண்டும் எடுக்கும் போது அதில் பாண்டியர்கள், சோழர்கள் என்று நிறைய அம்சங்களை சேர்க்க வேண்டி இருக்கிறது. இது ரொம்ப கஷ்டமான வேலை தான். அதற்கு எனக்கு தயாரிப்பாளர்களும் கிடைக்க வேண்டும். படத்தில் கமிட் செய்யப்படும் நடிகர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது கால்ஷீட் கொடுக்க வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கான பட்ஜெட் உண்மையிலேயே மிக குறைவானது தான். காரணம், இப்போது விஎப்எக்ஸ் நிறைய மேம்பட்டு இருக்கிறது. AI தொழில்நுட்பமும் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனால் படத்தை எளிதாக செய்துவிடலாம் என்று கூறி இருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full