7g படத்தில் 'ஆசையா காத்துல' பாடலின் காட்சியில் செல்வராகவன் ஆடி பார்த்துள்ளீர்களா. இதோ அரிய காட்சி.

By Rajkumar · 26/5/2020

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு இவர் தான் காரணம். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, இரண்டாம் உலகம் போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.

https://www.youtube.com/watch?v=gYAalVRsqS8

இந்நிலையில் செல்வராகவன் அவர்கள் இயக்கிய படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் செல்வராகவன் அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோவின் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஆசைய காத்துல தூதுவிட்டு என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார்கள். இந்த படத்திலேயே அந்த காட்சி தான் மக்கள் மத்தியில் பிரபலமானது.

இதில் செல்வராகவன் அவர்கள் நடனமாடி இருப்பார். செல்வராகவனை நடித்தும், இயக்கியும் பார்த்து உள்ளோம். செல்வராகவன் நடனமாடி பார்த்திருக்கீங்களா. இந்த படத்தை பாருங்கள். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full