மூன்றாம் குழந்தை பிறக்கும் மாதத்தை குறிப்பிட்டு செல்வராகவன் மனைவி வெளியிட்ட புகைப்படம்.

By Rajkumar · 3/9/2020

தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி  கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின்  முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார். தமிழில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இன்று வரை பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர் செல்வராகவனுக்கு, நடிகை சோனியா அகர்வாலுக்கு திருமணம் ஆகி பின்னர் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

https://twitter.com/GitanjaliSelva/status/1300994165233205248

நடிகை சோனியா அகர்வாலை செல்வராகவன் தான் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அதன் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி என்று அடுத்தடுத்து சோனியா அகர்வாலை நடிப்பிக்க வைத்த செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

சோனியா அகர்வாலுக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார் அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஓம்கர் என்ற மகனும் பிறந்தார்

https://www.instagram.com/p/CDGTXeuDKfD/

இப்படி ஒரு நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் அந்த புகைப்படத்தை கீதாஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், அந்த பதிவில் மூன்றாம் குழந்தை வந்து கொண்டு இருக்கிறது. ஜனவரியில் ரிலீஸ் ஆக இருக்கும் என்னுடைய குழந்தையை எதிர் நோக்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full