அது தவறானது, யாருக்காகவும் அதை மாத்தக் கூடாது - செல்வராகவன் சொல்வது என்ன?
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஆரியன். இந்த படத்தை இயக்குனர் படம் கே இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
மேலும், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தவர் செல்வராகவன். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் கலந்து கொண்ட செல்வராகவன், சமீப காலமாக சோகமாக இருந்த கிளைமாக்ஸ் காட்சிகளை ஏ ஐ மூலமாக மாற்றி வருகிறார்கள்.
ஆரியன் படவிழா:
அது ரொம்ப தவறான விஷயம். அது இந்தியாவில் மட்டும் இல்லை ஹாலிவுட்டிலும் நடக்கிறது. ஒரு படம் வெளியானதுமே அதை அப்படியே விட்டு விடணும். எந்த கிளைமாக்ஸை முதலில் வைத்திருந்தோமோ அதே அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடணும். யாருக்காகவும் அதை மாற்றக்கூடாது. மேலும், 7g ரெயின்போ காலனி படத்தினுடைய இரண்டாவது பகுதிக்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=bCYtP18HJGg
செல்வராகவன் பேட்டி:
கிட்டத்தட்ட பட வேலைகள் முடிந்து விட்டது. அந்த படத்தில் என்ன இருக்கும்? என்று உங்களுக்கு ஒரு ஆர்வம் வரும். அந்த ஆர்வத்தினால் தான் நானும் பார்ட் 2 எடுப்பதற்கு ஒத்துக் கொண்டேன். 70% படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம் தான் முடிக்காமல் இருக்கிறேன். கூடிய சீக்கிரமே அந்த படத்தையும் பார்ப்பீர்கள். புதுப்பேட்டை 2 கூடிய சீக்கிரம் பண்ணுவேன். ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றி கார்த்திக்கு கால் பண்ணி கேட்டிருக்கிறேன். நிச்சயமாக அதுவும் பண்ணலாம் என்று கூறி இருக்கிறார்.
படம் பற்றி சொன்னது:
தமிழ் சினிமாவில் வித்யாசமான மற்றும் தரமான படங்களை கொடுப்பதில் இயக்குனர் செல்வராகவனுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. காதல் கொண்டேன் படம் துவங்கி NGK வரை இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. சமீப காலமாக செல்வராகவன் அவர்கள் படங்களை இயக்குவது மட்டும் இல்லாமல் நடித்தும் வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.