செம்பருத்தி சீரியலில் இருந்து ஜனனி விளக்கப்ட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் காலகட்டத்தில் வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் குறுகிய காலத்திலேயே கிடைத்து விடுகிறது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி ஆஷிக் குமாரும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார். கோயம்பத்தூரை பூர்விகமா கொண்ட இவர் ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தனது முதல் சீரியல் எனத் தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சின்னத்திரையில் இவர் பிரபலம் என்றாலும் இவர் அறிமுகமானது என்னவோ சினிமாவில்தான். இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த நண்பேன்டா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது தொலைக்காட்சி தொடர்தான்.

Advertisement

மாப்பிள்ளை சீரியலுக்கு பின்னர் அடுத்தடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் செம்பருத்தி, ஆயுத எழுத்து போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்ட நிலையில் இவர் செம்பருத்தி சீரியலில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார். என்னதான் இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்து வந்தாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.

வீடியோவில் 11 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படி ஒரு நிலையில் இவர் தனது யூடுயூப் சேனலில் ரசிகர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடீரென்று இவருக்கு செம்பருத்தி சீரியலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் செம்பருத்தி சீரியலில் இருந்து தான் நீக்கப்பட்டதாக கூறியதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார் ஜனனி. மேலும், இதற்காக காரணத்தை கூறிய அவர், டேட் பிரச்சனை என்றும் சீரியலில் சில உள் பூசல் சென்றுகொண்டு இருந்தது என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement