அரைநிர்வாணமா வீடியோ எடுத்து - இரண்டாம் காதலன் மீது செம்பருத்தி சீரியல் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு.

By Rajkumar · 23/4/2021

செம்பருத்தி சீரியல் நடிகை ஜெனிபர் தனது காதலரிடம் முதல் திருமணத்தை மறைத்ததால் இரு குடும்பத்தாருக்கு இடையே அடிதடி ஏற்பட்டு இருந்த நிலையில் தனது காதலர் மீது புகார் அளித்துள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் பார்வதியாக ஷாபனாவும், ஆதியாக ஆபீஸ் கார்த்தியும் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் இருந்து விலகினார் கார்த்தி. இந்த சீரியலில் உமா என்ற கதாபத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஜெனிபர்.

முதல் கணவர் சரவனனுடன் ஜெனிபர்

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி சென்னையில் ஒரு கோயிலில் வைத்து எளிமையான முறையில் ஜெனிபருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணம் 'மதங்களைக் கடந்த காதல் திருமணம் என்பதும் குறிப்பிடதக்கது. அதிலும் ஜெனிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு கார் ஓட்டுநர் என்பது தான் மிகவும் ஆச்சரியம்.

ஜெனிஃபர் சரவணனை மூன்று வருடங்களுக்கு முன்னால் குடும்பத்தோடு ஒரு காரில் சென்றபோது தான் சந்தித்துள்ளார்.சரவணன் கூறிய கதை ஜெனிபர் குடும்பத்திற்கு ஏற்கனவே பிடித்துப் போய்விட சரவணனை மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இவர்கள் திருமணமான ஒரு சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=_eSYyCH7GlA

இந்தநிலையில் ஜெனிபர் தொடரில் பணியாற்றும் உதவி இயக்குனர் நவீன் குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து வழக்கு நடந்து வருவதை மறைத்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நவீன்குமார், ஜெனிபர் வீட்டிற்கு வந்து தகராறு செய்திருந்தார். இதையடுத்து இரு குடும்பத்திற்கும் அடிதடி ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நவீன் குமார் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார் ஜெனிபர். நவீன் குமார் தன்னை அவதூறாக படம் எடுத்து தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நவீன் குமாரும் தனது முதல் கணவரான சரவணனும் சேர்ந்து சதி செய்ததாகவும் கூறியுள்ளார் ஜெனிபர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full