7 வருடங்களுக்கு முன் விவாகரத்து- திருமண நாளில் மீண்டும் ஒன்றிணைந்த ரஞ்சித் - பிரியாராமன் ஜோடி வெளியிட்ட புகைப்படம்.

By Rajkumar · 18/6/2021

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்த எத்தனையோ நடிகைகள் தற்போது சினிமாவில் ரீ - என்ட்ரியை தூங்கினாலும் ஒரு சில நடிகர் நடிகைகள் தற்போது சின்னத்திரை பக்கம் வந்துவிட்டனர். அந்த வகையில் பிரியா ராமனும் ஒருவர். தமிழில் 1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த 'வள்ளி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன். அதன் பின்னர் இவர் தமிழில் ஒரு சில படங்களில் தான் நடித்தார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. ஆனால், மலையாளத்தில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

நடிகை பிரியா ராமனும் நடிகர் ரஞ்சித்தும் நேசம் புதிது படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 14), ஆகாஷ் (10) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நன்றாக சென்று கொண்ட இருந்த இவர்கள் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இருவரும் சட்ட ரீதியாக விவகாரத்துப்பெற்று பிரிந்துவிட்டனர்.

இதையும் பாருங்க : வரலாறு படத்தில் குட்டி வில்லன் அஜித்தாக வந்த பையன ஞாபகம் இருக்கா? - இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

விவகாரத்துக்கு பின்னர் பின்னர் சீரியல்களில் கவனம் செலுத்தினார். 2000 ஆம் ஆண்டு மலையாள சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கிய பிரியா ராமன். இடையில் ஒரு பத்து ஆண்டுகள் சீரியல் பக்கம் வரவில்லை அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் தனது ரீ என்ட்ரி கொடுத்தார் இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கிடைத்தது.

இந்த தம்பதியின் இரண்டு மகன்களும் பிரியா ராமனிடம் தான் வளர்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பின்னும் பிரியா ராமன் - ரஞ்சித் இருவரும் நல்ல நட்பில் தான் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் திருமண நாளில் ஒன்றாக இணைந்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். அதிலும் ரஞ்சித், என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால் எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும்
மகிழ்ச்சியும், தங்கங்களே என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full