உங்களுக்கு ஹோம்லி லுக் தான் கரெக்ட், வாய்ப்பில்லன்னு இப்படி எல்லாம் ட்ரெஸ் போடாதீங்க - ஜனனிக்கு ரசிகர்கள் அட்வைஸ்

By Rajkumar · 8/3/2023

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடித்தனர்.

செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ்இருந்தது . இத்தொடரில் ‘அகிலாண்டேஸ்வரி’ கதாபாத்திரத்துக்கென ரசிகர் பட்டாளமேஇருந்தது . அகிலாண்டேஸ்வரியின் 2-வது மருமகளாக நடித்திருந்தவர் ஜனனி அசோக் குமார். இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த தொடரில் நடிகை ஜனனி, ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இப்படி ஒரு நிலையில் இவர் தனது யூடுயூப் சேனலில் ரசிகர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடீரென்று இவருக்கு செம்பருத்தி சீரியலில் இருந்து அழைப்பு வந்தது. அதில் செம்பருத்தி சீரியலில் இருந்து தான் நீக்கப்பட்டதாக கூறியதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார் ஜனனி. மேலும், இதற்காக காரணத்தை கூறிய அவர், டேட் பிரச்சனை என்றும் சீரியலில் சில உள் பூசல் சென்றுகொண்டு இருந்தது என்றும் கூறி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar)

இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்ட காரணம் குறித்து பேசிய அவர் ' இந்த தொடரில் இருந்து என்னை திடீரென்று நீக்கியது வருத்தமாக இருக்கிறது அதற்கு முக்கிய காரணமே சில டேட் பிரச்சனைகள் தான் நான் நாமிருவர் நமக்கிருவர் தொடரில் நடித்து வருகிறேன். அதற்காக 1 முதல் 15 நாள் வரை தேதி கொடுத்துவிடுவேன். இடையில் நான் செம்பருத்தி சீரியல் டேட் கொடுப்பேன். ஆனால் சமீபகாலமாக செம்பருத்தி சீரியலில் டிஆர்பி குறைந்ததால்.

என்னுடைய டேட் ரொம்ப தேவைப்பட்டது. ஆனால் என்னால் டேட்டை சமாளிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி என்னை சீரியலில் இருந்து நீக்கிவிட்டார்கள் அதேபோல சீரியலில் சில உள் பிரச்சினைகளும் சென்று கொண்டு இருக்கிறது என்றும் கூறி இருந்தார். செம்பருத்தி சீரியலை தொடர்ந்து இவருக்கு மற்ற சீரியல்களில் முன்னை கதாபாத்திரம் கிடைக்கப்பெறவில்லை.

இதனால் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். ஆனால் பெரும்பாலும் அடக்கமான போட்டோக்களை மட்டுமே வெளியிட்டு வந்த ஜனனி தற்போது முதல் முறையாக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சிலர் வாய்ப்பில்லன்னு இப்படி எல்லாம் ட்ரெஸ் பண்ணாதீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்

Tamil Behind Talkies AMP · Quick view
View full