என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் - திடீர் திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட செம்பருத்தி சீரியல் ஷபானா.

By Rajkumar · 11/11/2021

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா திடீர் திருமணத்தை முடித்துள்ளார். வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் 'முத்த மந்தாரம்' என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொடரில் ஆபீஸ் சீரியல் நடிகர் கார்த்தி நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

மேலும், இந்த சீரியலில் நாயகியாக ஷபானா நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆர்யானும் ஷபானாவும் காதலித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ஆர்யன், இருவரும் கையில் மோதிரம் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்ட காரணம் இருவரது புற அழகு ஒரு நாள் காணாமல் போகும். ஆனால், உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும்' என்று குறிப்பிட்டிந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1458694517368840192

இதற்கு ஷபானா 'என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்க தவறியதில்லை' என்று கமெண்ட் செய்து இருந்தார். இப்படி ஒரு ஷபானா, தனக்கு திடீர் திருமணம் நடைபெற்று இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், 29 - 08 -2021 அன்று தன் பிறந்தநாளில் நிச்சயதார்த்தம் முடித்ததாக அறிவித்த ஷபானா,தற்போது 11-11 அன்று சென்னையில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு உங்கள் வாழ்த்துக்கள் தேவை என்றும் கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full