சரத்குமார் ரம்மி விளம்பரத்தில் நடித்தது குறித்த கேள்விக்கு சென்ராயன் அளித்த பதில்.

By Manikandan · 15/3/2023

ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்து நடிகர் சென்ராயன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

தண்டனை :

இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காலாவதியான மசோதா :

நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. இருப்பினும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

சென்றாயன் பேட்டி :

இந்த நிலையில் தான் பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகரான நடிகர் சென்றாயனிடம் ரம்மி ஆடுவது சரியா? தவறா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சென்றாயன் நான் "ரம்மி என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். "மங்காத்தா" என்ற அஜித் நடித்த படத்தை பார்த்திருக்கிறேன். மற்றபடி சீட்டாட்டம் என்னெவென்றே எனக்கு தெரியாது. அதிகபட்சமாக அந்த மாதிரியான விளம்பரத்திற்கு என்னை அழைத்தால் பொதுவாக நான் செல்லமாட்டேன் என்றார் நடிகர் சென்றாயன்.

https://youtu.be/vrSuWRNG5Ro

இப்படி கூறியவரிடம் பணம் கொடுத்தால் நீங்கள் நடிக்கத்தானே போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சென்றாயன் பணம் கொடுத்தால் எல்லா விளம்பரங்களிலுமா நடிக்க முடியும். கொஞ்சம் மரியாதையான கதாபாத்திரமாக இருந்தால் போகலாம். இந்நிலையில் ரம்மி விளம்பரம் குறித்து கேட்டதற்கு அந்த விளம்பரங்களை நான் பார்க்கவில்லை. மொபைல் என்னிடம் இருக்கிறது ஆனால் நான் பார்க்கும் நேரத்தில் அந்த விளம்பரம் வரவில்லை என்ன செய்வது என மளிப்பிவிட்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full