இது தான் அன்பின் குடும்பம் - மகன் மற்றும் மகளை அறிமுகம் செய்த செந்தில் ராஜலக்ஷ்மி.

By Arun · 27/2/2023

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.

அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.

புஸ்பா படம் :

தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

நாயகியான ராஜலட்சுமி :

அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். அந்த வீடியோ செம்ம வைரலானது. சமீபத்தில் கூட சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாட்டு பாடி வாக்கு சேகரித்து இருந்தார்கள். தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும், ராஜலட்சுமி தற்போது ஒரு புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

செந்தில் - ராஜலக்ஷ்மி பிள்ளைகள் :

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களை பெரும்பாலும் இவர்கள் மீடியா கண்களுக்கு காட்டியது இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர்களுக்கு காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று வாழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் தற்போது குழந்தைகளோடு இருக்கும் தங்கள் குடும்பப் படத்தை முதன் முறையாக வெளியிட்டிருக்கிறார் ராஜலட்சுமி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full