குழந்தை இல்லன்னு சுத்தி இருந்தவங்க அழுத்தம் தந்தாங்க, ஆனால்- ஸ்ரீஜா செந்தில் அளித்த பேட்டி

By subhashini · 5/6/2024

தங்களுடைய வாழ்க்கையில் அனுபவித்த மோசமான அனுபவங்களை குறித்து ஸ்ரீஜா- செந்தில் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் 'சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் செந்தில்.
அதற்கு முன் இவர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின் இவர் நடிகர் ஆனார். மேலும், சரவணன் மீனாட்சி சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீஜா.

சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்தனர். சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது. இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். ஆனால், சினிமாவில் இவருக்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார்.

செந்தில் ஸ்ரீஜா திருமணம் :

இதனிடையே சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த போதே செந்தில் ஸ்ரீஜாவிற்கு காதல் மலர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மீண்டும் இவர் தன் மனைவியுடன் இணைந்து ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்தார். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி இருந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

செந்தில் ஸ்ரீஜா குழந்தை:

இந்த சீரியல் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதனிடையே இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள். இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீஜாவுக்கு அழகான மகன் பிறந்தான். சமீபத்தில் தான் இவர்களுடைய குழந்தையின் முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ரீஜா-செந்தில், எங்களுக்கு தேவ் பிறப்பதற்கு முன்னாடியே இரண்டு மூன்று முறை கரு உருவாகி கலைந்துவிட்டது. அப்போதெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டோம்.

ஸ்ரீஜா-செந்தில் பேட்டி:

ரெண்டு பேருமே குழந்தையை அதிகமாக எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ஏமாற்றமாக இருந்தது. அப்போதுதான் ஸ்ரீஜா மீண்டும் கர்ப்பமாக இருந்தார். மூன்று முறை குழந்தை தவறியதை நினைத்து கொஞ்ச நாள் போகட்டும் அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். பொதுவாகவே ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் வீட்டில் சொல்லி விடுவோம். ஆனால், அது இல்லை என்ற போது ரொம்ப வருத்தமாக இருக்கும். நாங்கள் குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டதே கிடையாது. ஆனால், சுற்றி இருப்பவர்கள் தான் எங்களையும் ரொம்ப அழுத்தத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இதனால் சில சமயங்களில் எங்கள் இருவருக்குமே புரிதலில் சில பிரச்சனை ஏற்பட்டது.

குழந்தை குறித்து சொன்னது:

கல்யாணத்துக்குப் பிறகும் எங்களுக்கு இடையேயான புரிதலில் சின்ன குழப்பமும் வந்தது. தற்போது இப்போது எங்களுடைய மகன் எங்கள் இருவருக்கும் இடையே புரிதலை அதிகமாக்கி விட்டான். எந்த திருமணமாக இருந்தாலும் திருமணம் ஆகி மூன்று வருடங்களை கடந்து விட்டாலே உங்களுக்குள் பிரிவு வராது. காரணம் இருவருக்கும் இடையே புரிதல் உருவாகும். எங்களுக்குள் நிறைய சண்டை நடந்திருக்கிறது. மோசமான சூழலுமே வந்திருக்கிறது. இப்போதும் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களுடைய மகன் வந்த பிறகுதான் அந்த சண்டைக்கான நேரம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full